மூதாட்டியின் கண்ணில் 23 காண்டாக்ட் லென்ஸ்கள்.. வெலவெலத்து போன டாக்டர்.. பரவும் வீடியோ
வாஷிங்டன்: மூதாட்டி ஒருவரின் கண்ணில் இருந்து 23 ஜோடி காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர்கள் எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாக பார்ப்பவர்களை பதற வைத்து வருகிறது.
பார்வைக்குறைபாடு காரணமாக பலரும் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு வயது முதல் முதியவர்கள் வரை பலரும் கண்ணாடி அணிந்து இருப்பதை நாம் சர்வ சாதாரணமாக காண முடியும்.
பார்வையில் கோளாறு ஏற்படுவதற்கு சத்துக்கள் குறைபாடு என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள் பலரும் காண்டாக்ட் லென்ஸ் அணிவதை பார்க்க முடிகிறது.

காண்டாக்ட் லென்ஸ்
கண்னாடி அணிவதில் சில அசவுகரியங்கள் இருப்பதால் காண்டாக்ட் லென்ஸ் அணிவதாக பலரும் சொல்கிறார்கள். கண்கணில் கருவிழி வடிவத்தில் இருக்கும் லென்சை அதற்கான பிரத்யேக திரவத்தை பயன்படுத்தி சுத்தப்படுத்தி விட்டு பிறகு விரலால் கண்களுக்குள் சுலபமாக பொருத்தும் வகையில் காண்டாக்ட் லென்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் இரவு தூங்கும் முன்பாக அதை எடுத்து விடுவது வழக்கம்.

பெண்ணின் கண்ணில் 23 லென்ஸ்கள்
ஆனால், காண்டாக்ட் லென்சை எடுக்க மறந்து விட்ட ஒரு, வயதான பெண்மணி 23 லென்ஸ்களை அடுத்தடுத்து கண்களில் மாட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. படித்ததும் புருவத்தை உயர்த்த வைக்கும் இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட வயதான பெண்ணின் அடையாளம் எதையும் அந்த மருத்துவர் வெளிப்படுத்தவில்லை. மூக்கு கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கூட ஒரு சில சமயத்தில் கண்ணாடியை கண்ணில் அணிந்து கொண்டு.. கண்ணாடியை எங்கு வைத்தோம் என வீடு முழுவதும் தேடி அலைவதுண்டு.

பரவும் வீடியோ
வயதான அந்த பெண்ணின் கண்களில் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றும் வீடியோவை
டாக்டர் கேடரினா குர்தீவா என்பவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவோடு காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவாறு தூங்க வேண்டாம் என்றும் அந்த மருத்துவர் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொன்றாக எடுக்கும் காட்சிகள்
மேலும், இரவு தூங்க செல்லும் முன்பாக காண்டாக்ட் லென்சை எடுக்க மறந்துவிட்டு தூங்கிவிடும் இந்த பெண்மணி, மறுநாள் காலை புதிய காண்டாக்ட் லென்சை அணிந்து விடுவாராம். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.. மொத்தம் 23 நாட்கள் இப்படி நடைபெற்றுள்ளது. பெண்ணின் கண்ணில் இருந்து காண்டாக்ட் லென்ஸ் ஒவ்வொன்றாக எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த பெண்மணிக்கு கண்ணாடியே பொருத்தமானது என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மற்றொரு பதிவை வெளியிட்ட அந்த மருத்துவர், வாரக்கணக்கில் இமையின் மேல்பகுதியில் காண்டாக்ட் லென்ஸ்கள் இருந்ததால் பசை போல ஒட்டிக்கொண்டதாகவும் அதை சர்ஜிக்கல் உபகரணங்களை கொண்டு கவனமாக கண்களில் இருந்து பிரித்து எடுத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications