32 ஆண்டுகளாக ஷாப்பிங் மாலில் சிறைபிடிப்பு.. விடுவிக்க மறுக்கும் உரிமையாளர்கள்.. கொரில்லாவின் சோக கதை
வாஷிங்டன்: 32 ஆண்டுகளாக தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கொரில்லாவை விடுவிக்க பீட்டா அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
விலங்கினங்களில் மிகவும் புத்திசாலித்தனமானதாக கருதப்படும் விலங்கு குரங்கு தான். குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனித இனம் உருவானதாக அறிவியல் சொல்கிறது.
குரங்குகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அதிலும் சிம்பன்சி, கொரில்லா வகை குரங்குகள் மனிதர்களின் செயல்களை பார்த்து அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டது
நிஜ ஆர்ஆர்ஆர்! சுதந்திரத்துக்காக கொரில்லா யுக்தி! பிரிட்டிஷ்காரர்களை ஓடவிட்ட சீதாராம ராஜூவின் வரலாறு

கொரில்லா குரங்கு
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் வாலில்லா குரங்கு இனமான கொரில்லாக்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். வனத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் கொரில்லா வகை குரங்குகளை பிடித்து சிறிய இரும்பு கூண்டிற்குள் பிடித்து வைத்தால் அதன் சுதந்திரமே பறிபோய் எப்போது விடுவிக்கப்படும் என்றே ஏங்கி கிடக்கும். தாய்லாந்தில் இதேபோன்ற ஒரு துயரம்தான் கொரில்லா குரங்கு ஒன்றிற்கு ஏற்பட்டுள்ளது.

உலகின் சோகமான கொரில்லா
உலகின் சோகமான கொரில்லா என்று அழைக்கப்படும் இந்த கொரில்லாவின் சோக கதையை பார்க்கலாம்... தாய்லாந்தில் உள்ள pata என்ற ஷாப்பிங் மாலுக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு ஒரு வயதே ஆன ஒரு குட்டி கொரில்லா குரங்கு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டதாம். புவா நொய் (Bua Noi) என்ற பெயர் கொண்ட இந்த ஆண் கொரில்லா கொண்டு வரப்பட்டதில் இருந்து வட்ட வடிவமான இந்த ஷாப்ப்பிங் மாலின் மேல் தளத்தில் உள்ள ஜூவில் சிறிய இரும்பிலான கூண்டுகள் வைத்து அதற்குள் அடைக்கப்பட்டது.

ரூ.6 கோடி
வருட கணக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரில்லாவின் நிலையை கண்டு துயரம் அடைந்த வன விலங்குகள் ஆர்வலர்களும்.. பீட்டா அமைப்பும் ஷாப்பிங் மாலின் உரிமையாளர்களிடம் கொரில்லாவை விடுவிக்க வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் £7,00,000 ( இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.6 கோடி) கொரில்லாவை விடுவிக்க சம்மதம் தெரிவித்த உரிமையாளர்கள் பிறகு தொகையை $7,80,000- ஆக உயர்த்திவிட்டனராம்.

32 ஆண்டுகளாக சிறையில்...
இதனால், சுமார் 32 ஆண்டுகளாகவே சிறைபிடிக்கப்ப்பட்டு இந்த கொரில்லா கடும் வேதனையை அடைந்து வருகிறது. இதை எப்படியாவது விடுவித்து ஜெர்மனியில் உள்ள தங்கள் சக இனத்துடன் சேர்த்து விட வேண்டும் என்பதில் சமூக ஆர்வலர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்து அரசு தலையிட்டு இந்த பணத்தை திரட்டுவதற்காக பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

மீட்க முயற்சி
ஆனாலும் இந்த தொகையை திரட்ட முடியாததால் தொடர்ந்து சிறைபிடிப்பில் கொரில்லா சிக்கியுள்ளது. இந்த கொரில்லா தனிநபரின் சொத்தாக கருதப்படுவதால் அரசும் அதிகம் தலையிட முடியாது என்ற நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனினும் தொடர்ந்து இந்த கொரில்லாவை மீட்க முயற்சிகள் நடப்பதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன.