எங்கடி வச்ச? கவுண்டமணி பட பாணியில்.. 41 லட்சம் அடித்த லாட்டரி சீட்டை தேடி அலைந்த பெண்.. கிடைத்ததா?
வாஷிங்டன்: லாட்டரியில் 41 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை மறதியில் எங்கோ வைத்து விட்டு பெண் ஒருவர் தேடி அலைந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் புழக்கம் அதிகம் உள்ளது.
ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் லாட்டரிக்கு அனுமதி இல்லை என்றாலும், பெரும்பாலான மாகாணங்களில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது.

பரிசு வாங்குவதற்குள் பட்ட பாடு இருக்கே..
இதனால் அடிக்கடி இத்தகைய லாட்டரிகளில் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளின் சுவாரசிய செய்திகள் இணையத்தில் பரவி பலரையும் ரசிக்க வைக்கும் அளவில் அமையும். அந்த வகையில், அண்மையில் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீஜனா வாஸ்டி (வயது 41) என்பவருக்கு லாட்டரியில் சுமார் 41 லட்ச ரூபாய் பரிசாக அடித்து இருக்கிறது. ஆனால், அந்த லாட்டரி பரிசை வாங்குவதற்குள் அவர் பட்ட பாடுதான் படு சுவாரசியமாக உள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.

சவரப்பெட்டிக்குள் லாட்டரி
கவுண்டமணிக்கு லாட்டரியில் பரிசு விழும் ஒரு பிரபலமான நகைச்சுவை காட்சி உண்டு. 15 லட்சம் ரூபாய் பரிசு விழுந்து இருப்பதாக செந்தில் கூறுவார். லாட்டரி சீட்டை தனது கையில் வைத்திருந்த பெட்டியில் வைத்தது தெரியாமல், நமக்குத்தான் 15 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கிறதே.. இனியும் இந்த சவரப்பெட்டி எதற்கு என செந்தில் பேச்சைக் கேட்டு ஆற்றில் வீசி விட்டு.. வீடு முழுக்க டிக்கெட்டை தேடுவார்.

கவுண்டமணி காமெடி பாணியில்
கடைசியில் எங்கும் தொலைந்து போய்விடக்கூடாது என்பதற்காக உங்கள் சவரப்பெட்டியில் தான் லாட்டரி டிக்கெட்டை பத்திரமாக வைத்து இருக்கிறேன் என்று கவுண்டமனியின் மனைவி கூறுவார். கடைசியில் பரிசு விழுந்தும் லாட்டரி ஆற்றோடு போய்விட்டதே.. என்று நொந்து போகும் கவுண்டமணி உட்கார்ந்து தனது வேதனையை கொட்டி தீர்ப்பார். மிகவும் பிரபலமான இந்த காமெடி காட்சியை ரசிக்காதவரே இல்லை எனலாம். இப்போது ஏன் இந்த கதை என நினைக்க வேண்டாம்.. மேரிலாண்டில் லாட்டரியில் பரிசு அடித்த ஸ்ரீஜனாவுக்கு இதே போன்ற கதைதான் நடந்துள்ளது.

டிக்கெட்டை வைத்த இடம் மறந்துபோனதால்..
5 டாலர் மதிப்பு மிக்க ஸ்க்ராட்ச் ஆப் லாட்டரி டிக்கெட்டை கடந்த ஜூன் மாதம் ஸ்ரீஜனா வாங்கியிருக்கிறார். அப்போது தான் வாங்கியிருந்த லாட்டரிக்கு 50 ஆயிரம் டாலர் இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம் பரிசு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. முதலில் வெறும் 50 டாலர்தான் கிடைத்தது என்று கருதிய அவருக்கு 41 லட்சம் ரூபாய் பரிசு அடித்ததால் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். ஆனால், டிக்கெட்டை மறைத்து வைத்திருந்த இடத்தை மறந்து போயிருக்கிறார்.

எப்படி செலவு செய்வது என யோசனை
இதனால், அதிர்ச்சி அடைந்த ஸ்ரீஜனா வீடு முழுக்க தேடியிருக்கிறார். டிக்கெட் வேறு எங்கு காலாவதி ஆகிவிட்டதோ என்ற அச்சத்துடன் தேடியிருக்கிறார். கடைசியில் ஒருவழியாக தனது சூட்கேசில் லாட்டரி டிக்கெட் கிடைத்து இருக்கிறது. அதன் பிறகுதான் சந்தோஷம் அடைந்து இருக்கிறார் ஸ்ரீஜனா.. டிக்கெட்டை கண்டுபிடித்த பிறகு பெரும் நிம்மதி அடைந்து இருப்பதாக கூறும் ஸ்ரீஜனா.. மிகவும் தாமதம் ஆகவில்லை என்பதையும் அறிந்து இருக்கிறார். தற்போது கிடைக்கும் பணத்தை எப்படி செலவு செய்வது என திட்டம் போட்டு கொண்டு இருக்கிறாரம் ஸ்ரீஜனா..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications