வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

28 வருடங்களில் இதுதான் முதல் முறை.. மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர்! தகர்ந்த டிரம்ப் சாம்ராஜ்யம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பதவியில் இருந்த அதிபர் மறுபடியும் தேர்வு செய்ய முடியாமல் தோற்றுப் போனது கடந்த 28 வருடங்களில் இதுதான் முதல் முறையாகும்.

அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆளும்கட்சி இப்போதுதான், இரண்டாவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்பை இழந்து இருக்கிறது.

ஆம்.. 1992ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபராக இருந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் தோல்வியை தழுவினார். பில் கிளின்டன் அதிபரானார்.

முடிந்தது இழுபறி.. அபாரமாக வென்றார் ஜோ பிடன்.. அமெரிக்காவின் 46வது அதிபராகிறார்முடிந்தது இழுபறி.. அபாரமாக வென்றார் ஜோ பிடன்.. அமெரிக்காவின் 46வது அதிபராகிறார்

28 வருடங்கள்

28 வருடங்கள்

கிளிண்டனின் வெற்றிக்கு பிறகு, கடந்த 28 வருடங்களில் முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அதிபர் மறுபடியும் தேர்வு செய்ய முடியாமல் தோற்றுள்ளார். அங்கு ஒரு அதிபர் அதிகபட்சம் 2 முறை அந்த பதவியை வகிக்க முடியும் என்பது விதிமுறை.

வெள்ளை இன வெறி

வெள்ளை இன வெறி

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை இனவெறியுடன் நடந்து கொண்டது, அவரது ஆட்சியில் வெள்ளை இன குழுக்கள் வலுப்பெற்றது, கருப்பினத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாமல் அதிகரித்தது ஆகியவையும் இறுதியாக கொரோனா நோய் தொற்று பரவலை குறைக்க முடியாமல் திணறியதும் மக்களின் அதிருப்திக்கு காரணம்.

கொரோனா வம்பு

கொரோனா வம்பு

கொரோனா தொடர்பாக தொடர்ந்து பொய்யாக பேசியது உள்ளிட்டவையும் மக்களிடம் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனவேதான் 28 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா மற்றொரு முறை வரலாற்றை நிகழ்த்தியுள்ளது.

அடித்து நொறுக்கினர்

அடித்து நொறுக்கினர்

தோல்வியை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாதவர் டிரம்ப். ஆனால் தங்களது வாக்கு எனும் ஆயுதத்தால் அவரது சாம்ராஜ்யத்தை அடித்து நொறுக்கி உள்ளனர் அமெரிக்கர்கள். எனவேதான் வீதியெங்கும் மக்கள் இப்போது உற்சாக நடனமிட்டு ஆடி வருகிறார்கள்.

English summary
Donald Trump failed to win re election as a president after 1992, on that year George HW Bush was lost to Bill Clinton.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X