இதுதாங்க உண்மையான காதல்.. பிரேக் அப் ஆகி 43 ஆண்டுகள் கழித்து 69 வயதில் காதலனை மணம் முடித்த பெண்மணி

பிரேக் அப் ஆகி 43 ஆண்டுகளுக்கு பிறகு 69 வயதில் தனது காதலரை அமெரிக்க பெண்மணி கரம் பிடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பெற்றோரின் எதிர்ப்பால் கல்லூரி பருவத்தில் காதலை கைவிட்ட பெண், 43 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது காதலரை சந்தித்து இருக்கிறார். அப்போதும் அன்பு மாறாமல் இருவரும் இருந்ததால் 69 வயதிலும் இருவரும் மணம் முடித்து இருக்கின்றனர். இதுதாங்க உண்மையான காதல் என்று சொல்லி நெட்டிசன்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இந்த ஜோடியின் காதல் கதை அமைந்துள்ளது.

காலம் முழுக்க இப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் காதலித்துக் கொண்டு இருக்கும் போது காதலர்களின் ஏக்கமாக இருக்கும். ஆனால், இதை காலமும் சூழலும் தான் இதை உறுதி செய்யும்.

பெற்றோர்களின் எதிர்ப்பு உள்பட எத்தனையோ காரணங்களால் காதலை கைவிடும் காதலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

உருக்கமான காதல் கதை

உருக்கமான காதல் கதை

காதலை முறித்துக்கொண்டாலும் மனதளவில் சிலர் வாழ்நாள் முழுவதும் தங்கள் முதல் காதலை மறக்காமல் நினைவில் வைத்து இருப்பது உண்டு. அத்தகைய ஒரு உருக்கமான காதல் கதைதான் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதலனை வயது முதிர்ந்த நிலையில் தற்போது கரம் பிடித்து இருக்கிறார் மூதாட்டி ஒருவர். இவர்களது காதல் கதை இணையத்தில் பலரது மனதையும் உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

காதலுக்கு கடும் எதிர்ப்பு

காதலுக்கு கடும் எதிர்ப்பு

ஜியேனி வாட்ஸ் என்ற பெண் தனது கல்லூரி காலத்தில் அதாவது 1971 ஆம் ஆண்டில் ஸ்டீபன் வாட்ஸ் என்பவரை பார்த்து இருக்கிறார். பார்த்தவுடன் காதல் என்று சொல்லும் அளவுக்கு இருவரும் காதலில் விழுந்துள்ளனர். உயிருக்கு உயிராய் இருவரும் காதலித்து வந்தாலும் ஜியேனி வட்ஸ்சின் தாயார் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்துள்ளார். ஸ்டீபன் வாட்ஸ் கருப்பு இனத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு ஜியேனி வாட்சின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

ஓய்வு காலத்தில் மீண்டும் நினைவுகள்

ஓய்வு காலத்தில் மீண்டும் நினைவுகள்

அதேபோல், ஜியேனி வாட்சிக்கு வேலையும் கிடைத்தது. தினமும் நீண்ட தூரம் வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பவே நேரம் சரியாக இருந்ததுள்ளது. வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் வேறு வழியின்றி காதலை நிராகரித்துள்ளார். ஆனாலும் தனது செயலை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறார். அதன்பிறகு காலங்கள் உருண்டோடிவிட்டன. தனது வேலையில் இருந்தும் ஜியோனி வாட்ஸ் ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு காலத்தில் தனது காதலர் ஸ்டீபன் வாட்ஸ் பற்றிய நினைவுகள் அவருக்கு வந்துள்ளது.

அவருக்கும் குழந்தைகள் இல்லை

அவருக்கும் குழந்தைகள் இல்லை

இதையடுத்து ஸ்டீபன் வாட்ஸின் உறவுக்காரர் மூலமாக அவரை கண்டுபிடித்துள்ளார். வேறு ஒரு பெண்னை திருமணம் முடித்து இருந்த ஸ்டீபன் வாட்ஸ் அவரையும் விவாகரத்து செய்து இருந்ததும் அவருக்கும் குழந்தைகளும் இல்லை என்பதும் அப்போது ஜியோனி வாட்ஸ்க்கு தெரியவந்துள்ளது. தங்குவதற்கு வீடு இன்றியும் இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டு கடுமையான உடல் நலம் பாதித்த நிலையில் நர்சிங்ஹோமில் தங்கியிருந்தத தகவலும் கிடைத்தது.

பார்த்தவுடன் அடையாளம்

பார்த்தவுடன் அடையாளம்

இதையடுத்து 52 ஆண்டுகள் கழித்து ஸ்டீபன் வாட்சை ஜியோனி சந்தித்துள்ளார். மிகவும் நெகிழ்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. பார்த்தவுடன் ஸ்டீபன் வாட்சும் ஜியோனியை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். இருவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொளவது என முடிவு எடுத்து இருக்கின்றனர். அதன்படி கடந்த அக்டோபரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

43 ஆண்டுகள் கழித்து மீண்டும் காதல்

43 ஆண்டுகள் கழித்து மீண்டும் காதல்

43 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். தனது கணவர் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தன்னை முன்பை போலவே காதலிப்பதாக மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் ஜியோனி வாட்ஸ்.. சினிமாவை மிஞ்சும் வகையில் 43 ஆண்டுகள் கழித்து காதல் மீண்டும் கூடியிருக்கிறது. வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதமம்மா.. என்ற வாலியின் வரிகளை நினைவுபடுத்தும் விதமாக இந்த காதல் கதை உள்ளதாக இணையத்தில் பலரும் மெய்சிலிர்த்து பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+