'ஷாக்..' அல்கொய்தா வெளியிட்ட புதிய வீடியோவில்.. உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்கொய்தா தலைவர்
வாஷிங்டன்: இரட்டை கோபுர தாக்குதலின் 20ஆவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட அய்மான் அல்-ஜவாஹிரி பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இரட்டை கோபுர தாக்குதல் நடந்த செப்டம்பர் 11, அமெரிக்க வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். விமானங்களைக் கடத்திய பயங்கரவாதிகள் இரட்டை கோபுரம், பென்டகனில் மோதினர்,
இதில் கொடூர தாக்குதலில் மொத்தம் 2997 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னரே ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இரட்டை கோபுர தாக்குதல்
அனைத்து அமெரிக்கர்களின் நெஞ்சிலும் ஆழமாகப் பதிந்த இந்த தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பைடன், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்று களத்தில் போராடியவர்களை நினைத்து அமெரிக்கா பெருமிதம் கொள்வதாகவும் வெறும் 102 நிமிடங்களில் 2997 பேரது கனவு சிதைந்துவிட்டதாகவும் அதிபர் பைடன் குறிப்பிட்டார்.

காத்திருந்த ஷாக்
அதேநேரம் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பும் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டது. சுமார் 60 நிமிடங்கள் நீளமுள்ள "Jerusalem will not be Judaised' என்ற இந்த வீடியோவை அல்கொய்தா பயங்கரவாதிகள் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது. ஏனென்றால் இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாகப் பேசும் காட்சிகள் இருந்தன.

யார் இந்த அய்மான் அல்-ஜவாஹிரி
எகிப்து நாட்டை சேர்ந்த பயங்கரவாதி தான் அய்மான் அல்-ஜவாஹிரி. கடந்த 2011ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவித்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டவர் தான் இந்த அய்மான் அல்-ஜவாஹிரி. அல்கொய்தா நடத்திப் பல தாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்டவர் அய்மான் அல்-ஜவாஹிரி.

வீடியோ
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. அதன் பிறகு இவரைப் பற்றி எந்தவொரு வீடியோ அல்லது தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் அய்மான் அல்-ஜவாஹிரி உயிரிழந்ததாகவே பலரும் கருதினர். இந்தச் சூழலில் தான் அய்மான் அல்-ஜவாஹிரிவின் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதில் அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

எப்போது எடுக்கப்பட்டது
அதேநேரம் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. மேலும், அந்த வீடியோவில் ஆப்கன் நிலை குறித்தும் தாலிபான்கள் ஆட்சி குறித்தும் எதுவும் இடம் பெறவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்புவதாக மட்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவின் இதயத்தையே 19 பயங்கரவாதிகள் காயப்படுத்தியதாக அந்த வீடியோவில் அய்மான் அல்-ஜவாஹிரி குறிப்பிடுகிறார்.

புத்தகம்
முன்னதாக, அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி எழுதிய 852 பக்க புத்தகம் ஒன்றும் டெலிகிராமில் வெளியிடப்பட்டது, அதில் அவர் அல்-காய்தாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவரித்துள்ளார். இந்த புத்தகம் கடந்த ஏப்ரல் மாதம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.. அதில் கடந்த 2011இல் பாகிஸ்தானில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட காஷ்மீர் ஜிஹாதி இலியாஸ் காஷ்மிரி மற்றும் ஆப்கனில் கொல்லப்பட்ட அல்-கொய்தாவின் இந்திய அமைப்பின் தலைவர் மவுலானா அசிம் உமர் ஆகியோர் குறித்த கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications