ஆஹா.. ஒரே ஒரு மெசேஜ்.. 50 பில்லியன் டாலரோடு உலகில் 25வது பணக்காரராக மாறிய நபர்! முழு பின்னணி
வாஷிங்டன்: கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பதற்கு ஏற்ப செல்போனுக்கு வந்த ஒரு மெசேஜ் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 50 பில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் மிகப்பெரிய 25வது பணக்காரராக மாறிய சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டும் என விரும்புகின்றனர். இது அனைவருக்கும் சாத்தியம் ஆகுமா? என்றால் சற்று சிரமமான விஷயம் தான்.
இருப்பினும் தொடர்ச்சியாக திட்டமிட்டு உழைத்தால் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக மாறலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் உழைக்ககாமல் ஒரே ஒரு மெசேஜ் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறிய சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

செல்போனுக்கு வந்த மெசேஜ்
அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதியில் வசித்த வருபவர் டேரன். லூசியான பொது பாதுகாப்பு துறையில் சட்ட அமலாக்க அதிகாரியாக பணியாற்றி இருந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் டேரனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வங்கி கணக்கில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உலகின் 25வது பணக்காரராக...
இதனை பார்த்து அவர் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி நிலைக்கு சென்றார். தனது வாழ்நாளில் இத்தகைய டாலர் பணத்தை அவர் ஒருநாளும் பெற மாட்டார் என்பதால் அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இதன்மூலம் விர்ஜின் குழுமத்தின் உரிமையாளரான ரிச்சர்ட் பிரான்சனை விட டேரன் 10 மடங்கு பணம் வைத்துள்ள நபராக மாறினார். அதோடு உலகில் 25வது பணக்காரர் என்ற நிலைக்கு டேரன் சென்றார்.

வங்கிக்கு தகவல்
இருப்பினும் அவர் அந்த டாலரை பயன்படுத்த விரும்பவில்லை. இதனால் தனது வங்கி கணக்குக்கு எப்படி இவ்வளவு டாலர் வந்தது என்பதை அவர் யோசித்தார். வங்கியில் ஏதாவது தவறுதலாக டாலர் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர் எண்ணினார். இதனால் அவர் வங்கியை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார்.

கைவிட்டு போன பணம்
வங்கி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது தவறுதலாக டேரனின் வங்கி கணக்குக்கு 50 பில்லியன் டாலர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை 3 நாள் முடக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வங்கி கணக்கில் இருந்த 50 பில்லியன் டாலரை திரும்ப எடுத்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications