வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசிய வம்சாவழியினர் மீது வெறுப்புணர்வு காட்டாதீங்க.. அமெரிக்கர்களிடம் கமலா ஹாரிஸ் உருக்கம்

அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆசிய வம்சாவழியினர் மீது எந்தவித வெறுப்புணர்வும், பாகுபாடும் காட்ட வேண்டாம் என்று, அமெரிக்க மக்களுக்கு கமலா ஹாரிஸ் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

வருடந்தோறும், ஆசிய அமெரிக்க ஜனநாயக மாநாடு ஒன்று நடத்தப்படுவது வழக்கம்.. அந்த வகையில் இந்த வருடமும் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது..

ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம் ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்

அமெரிக்காவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வழிவகை செய்ய இந்த மாநாடு கண்டிப்பாக உதவும் என்று நம்பப்பட்டன.

 குடியுரிமை

குடியுரிமை

காரணம், ஜப்பான், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தும், பணி செய்தும் நிரந்தர குடியுரிமை பெறும் ஆசிய குடிமக்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது... ஆனால், அமெரிக்காவில் உள்ள அதீத இனப்பற்று கொண்ட பூர்வகுடி அமெரிக்கர்கள் ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேற வருபவர்கள்மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகி வருகிறது.

மாநாடு

மாநாடு

எனவே, இந்த பிரச்சனை குறித்தெல்லாம் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் சிறப்புரையாற்ற தலைப்பு ஒன்றும் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில், அமெரிக்க மற்றும் ஆசிய ஒற்றுமை குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார் என்ற செய்திகள் பரவியதும் எதிர்பார்ப்புகள் மேலும் எகிறியது.

 வெறுப்புணர்வு

வெறுப்புணர்வு

அதன்படியே, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மாநாடு நடந்தது.. இந்த மாநாட்டில், கமலா ஹாரீஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது அவர், "அமெரிக்காவில் வாழும் ஆசிய வம்சாவழி மக்கள் மீது இனப்பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வு காட்ட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். ஆசிய வம்சாவழியினர் மீது தாக்குதல் நடத்தும் நபர்களை தண்டிக்க கடுமையான சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக எச்சரித்த கமலா, அமெரிக்கா புதிய பாதையில் பயணம் செய்து வருவதாக கூறினார்.

தாக்குதல்

தாக்குதல்

கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில், அமெரிக்காவில் ஆசிய வம்சாவழியினருக்கு எதிராக 1100 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகவும், ஆனால், ஒரே வருஷத்தில் தற்போது, அந்த தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை 6,600 ஆக உயர்ந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

வம்சாவழி

வம்சாவழி

2021ம் ஆண்டின் தொடக்கம் முதல் பல்வேறு மாகாணங்களில் தபால் வாக்கு முறையை முடக்கும் 360 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இவை அனைத்துமே ஆசிய வம்சாவழியினர் வாக்கு உரிமையை முடக்கும் நடவடிக்கையே என்று காட்டமாக கமலா விமர்சித்தார். அதிபர் தேர்தலில் ஆசிய வம்சாவழி மக்களில் 34 சதவீத பேர் தபால் மூலம் வாக்களித்ததாக கமலா ஹாரிஸ் அப்போது குறிப்பிட்டு பேசினார்.

English summary
Americans dont show any hatred towards Asian descent people, requests Kamala harris
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X