டிரம்புக்கு என்னாச்சு? நள்ளிரவில் பதற்றமான அமெரிக்கா! பென்டகன் ‛பீட்சா’ ஆர்டரால் அதிகரித்த பரபரப்பு
வாஷிங்டன்: கடந்த 30ம் தேதி திடீரென்று எக்ஸ் சமூக வலைதளத்தில் TRUMP IS DEAD என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக தொடங்கியது. டொனால்ட் டிரம்ப் உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஹேஷ்டேக் அனைவரையும் அதிர வைத்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிரம்புக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாக கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவில் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தலைமை அலுவலகம் பென்டகன் பகுதியில் அதிகப்படியான பீட்சா ஆர்டர் செய்யப்பட்டது. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியதோடு அதன்பிறகு தான் டிரம்ப் இறப்பு தொடர்பான ஹேஷ்டேக் அதிகரிக்க தொடங்கியது. இப்படி பென்டகனின் பீட்சா ஆர்டர் அமெரிக்கர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். அவருக்கு தற்போது 79 வயது ஆகிறது. இந்நிலையில் டொனால்ட் டிரம்பின் உடல்நலம் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. டிரம்ப்பால் சரியாக நடக்க முடியவில்லை. அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் 25ம் தேதி தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்யை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரது வலது கையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதயம் அல்லது சிறுநீரக பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவருக்கு உடல்நல பிரச்சனையை எதிர்கொள்வதாக தகவல்கள் பரவின.
அதன்பிறகு கடந்த மாதம் 30ம் தேதி திடீரென்று சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் TRUMP IS DEAD என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் இறந்து விட்டதாக ஒரு தரப்பினர் நம்ப தொடங்கினர். ஆனால் அதனை வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்தது. டிரம்ப் நலமாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தர்.
ஆனால் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதற்கு முன்பாகவே கடந்த மாதம் 29ம் தேதி அமெரிக்காவே பரபரத்துப்போனது. இதற்கு பென்டகனில் இருந்து அதிகப்படியான பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டது தான் காரணமாகும். அதன்பிறகு தான் இந்த ஹேஷ்டேக்கும் டிரெண்டாக தொடங்கி உள்ளது. அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம் பென்டகன் என்று அழைக்கப்படுகிறது. இது வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ளது. அமெரிக்காவில் எமர்ஜென்சி அல்லது எதிரிகள் மீதான தாக்குதல் நடத்த திட்டமிடும்போது முப்படை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பென்டகனில் கூடுவது வழக்கம்.
அதுமட்டுமின்றி பணியாளர்கள் இரவு, பகலாக பென்டகன் அலுவலகத்தில் பணி செய்வார். அப்போது பென்டகன் அலுவலகத்தில் இருந்து அதிகப்படியான பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்படும். பணியாளர்கள், அதிகாரிகள் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே இருப்பதால் அவர்கள் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் பென்டகனின் பீட்சா ஆர்டர்கள் கணக்கில் கொள்ளப்படும். திடீரென்று வழக்கத்தை விட பீட்சா ஆர்டர்கள் அதிகமாகும்போது அமெரிக்கா சார்பில் ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராகிறது என்று அமெரிக்கர்கள் யூகிப்பார்கள்.
அந்த வகையில் கடந்த மாதம் 29ம் தேதி பென்டகன் பகுதியில் மட்டும் பீட்சா ஆர்டர் வழக்கத்தை விட கிடுகிடுவென அதிகரித்தது. பென்டகனுக்கான பீட்சா குறியீடு 800 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் டிரம்ப் உடல்நிலை பிரச்சனை குறித்த தகவல்கள் பரவ தொடங்கியதோடு, ‛TRUMP IS DEATH' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிரம்புக்கு ஒன்றும் நடக்கவில்லை.
இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் பென்டகனில் பீட்சா ஆர்டர் அதிகரிக்கும்போது ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது. உதாரணமாக பனாமா தாக்குதல், கிரெனடா போர், செர்பியாவின் மீதான நேட்டோ குண்டு வீச்சு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் போன்ற சமயங்களில் எல்லாம் பென்டகனில் இருந்து அதிகப்படியான பீட்சாக்கள் ஆர்டர்கள் செய்யப்பட்டு இருந்தது. சமீபத்தில் கூட இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடத்தியது. அன்றைய தினமும் பென்டகனில் இருந்து பீட்சா ஆர்டர்கள் குவிந்து இருந்தன. இதனால் ஒவ்வொரு முறை பென்டகனில் இருந்து பீட்சா ஆர்டர் குவியும்போது அமெரிக்கா பெரிய செயலில் இறங்குவது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே தான் கடந்த மாதம் 29ம் தேதி பென்டகன் பீட்சா ஆர்டரால் அமெரிக்கா பரபரப்பானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications