iPhone 16: வேற லெவல் அப்டேட்களுடன் வெளியான ஐ போன் 16.. இந்தியாவில் விற்பனை எப்போது?
வாஷிங்டன்: ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் நேற்று அறிமுகம் செய்தார். ஐபோன் பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பல்வேறு அசத்தல் அப்டேட்களுடன் இந்த மாடல் போன்கள் அறிமுகம் ஆகியுள்ளன. ஐபோன்களின் விலை என்ன, இந்திய சந்தைகளில் எப்போது முதல் கிடைக்கும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
டெக் உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் நிறுவனம் ஆப்பிள். செல்போன்கள், வாட்ச்கள், ஏர்பாட்ஸ் என கேட்ஜட் சந்தைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் குளோ டைம் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில், தனது ஆப்பிள் ஐபோன் சீரீஸ்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதோடு அதன் சிறப்பம்சங்களும் வெளியாகும். அந்த வகையில், உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ஆப்பிள் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது.
ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 போன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்று பார்த்தால், ஐபோன் 16- மாடலில் 6.1 இன்ச் திரை கொண்டதாக உள்ளது.
ஐபோன் 16 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் திரையுடன் வெளியாகியுள்ளது. ஏ18 ப்ராசஸர் , 48 மெகாபிக்சல் உடன் கூடிய மெயின் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமரா, டைப்-சி சார்ஜிங் போர்ட் என அசத்தல் அப்டேட்கள் இந்த மாடல்களில் இடம் பெற்றுள்ளது. கருப்பு, வெள்ளை டைட்டானியம் என மொத்தம் ஐந்து வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 மாடல் போன்களின் ப்ரீ ஆர்டர் விரைவில் தொடங்க உள்ளது. பிளிப் கார்ட், அமேசான், ஆப்பிள் ஸ்டோர்கள் உள்பட பிற தளங்களில் விற்பனையாக உள்ளன. செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ப்ரீ -ஆர்டர் (pre-order) இந்தியாவில் தொடங்குகிறது. முதல் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.
விலையை பொறுத்தவரை இந்திய சந்தைகளில் ஐபோன் 16- மாடல் போன் ரூ.79 ஆயிரமாக இருக்கும். ஐபோன் 16 பிளஸ் மாடல் போன்கள் ரூ.89,900-விலையிலும் ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,000-ஆக நிர்ணயிகப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திம் ப்ரீமியம் மாடலான 16 ப்ரோ மேக்ஸ் மாடல், இந்திய சந்தைகளில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 ஆக இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications