அமெரிக்காவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா - கொத்து கொத்தாக மருத்துவமனைகளில் சிகிச்சை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 1,69,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,908 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஒரே நாளில் லட்சக்கணக்கானோர
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மூன்றாவது அலை அதிதீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் அங்கு ஒரே நாளில் 1,69,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,908 பேர் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். தினசரி பாதிப்பு 7,14,335 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 21,54,95,617 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,26,83,664 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 44,88,844 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 1,69,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,908 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,93,42,153 பேராக உயர்ந்துள்ளது. 3,07,32,120 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,215 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 6,51,956 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை வீசத்தொடங்கிய போது அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இரண்டாவது அலைக்கு அமெரிக்க மக்கள் தப்பினர்.
இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை சூறையாடிய போது அமெரிக்க மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர். தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய மறந்தனர். இதன் விளைவை தற்போது அனுபவிக்கின்றனர். அங்கு மூன்றாவது அலை அதிதீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் சராசரி நாளொன்றுக்கு 11,000 ஆக குறைந்த தினசரி பாதிப்பு இப்போது ஒன்றரை லட்சமாக அதிகரித்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக புள்ளி விவரங்களின் படி ஜனவரியில் 2,50,000 ஆக இருந்த தினசரி எண்ணிக்கை பிறகு குறைந்தாலும் இன்றைய தேதியில் மீண்டும் 1.50 லட்சம் பேருக்கு தினசரி கொரோனா தொற்றுவது அங்கு கவலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் இது தொடர்பாக எச்சரித்த போது, தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும் இல்லையெனில் இன்னும் மோசமான சூழ்நிலை ஏற்படும் என்கிறார். அப்படி தடுப்பூசிகளை விரைவு படுத்தவில்லை எனில் ஜனவரி போல் அலை அலையாக கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க மக்கள் தொகையில் 50% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வாக்சின் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அதிவேகமாகப் பரவும் டெல்டா வகை கொரோனா ஆபத்தாக இருந்து வருகிறது. புளோரிடாவை அடுத்து டெக்சாஸ் மாகாணத்திலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. புளோரிடா, டெக்சாஸ், மிசவ்ரி, அர்கன்சாஸ், லூசியானா, அலபாமா, மற்றும் மிசிசிபி மாகாணங்களில் கோவிட் அதிகரித்து வருகிறது.
கொத்து கொத்தாக கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பல மாகாணங்களிலும் மளமளவென படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பலர் பெட் கிடைக்காமல் வராண்டாவில் அமரவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புளோரிடாவில் 95 சதவிகித மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் தறபோது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் ஃபைசர் - பயோஎன் டெக் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக மீண்டும் பள்ளிக்குச் செல்லமுடியும் என்று கூறப்பட்டது எனினும் 11 வயதிற்கு குறைவான குழந்தைகள் தற்போது டெல்டா வைரஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. தினசரி மரணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 500 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1200 பேர் உயிரிழந்துள்ளது அந்நாட்டு மக்களை கலக்கமடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் 61% பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
