காட்டுத்தீயாய் பரவம் கொரோனா - உலகம் முழுவதும் 37,50,55,884 பேர் பாதிப்பு - 56,81,197 பேர் மரணம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 21,07,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,50,55,884 பேராக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,07,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,50,55,884 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 5,764 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. பல கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் புது புது வேரியண்ட் வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என பல வைரஸ்கள் மக்களை பாதித்துள்ளன.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17,38,773 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் 29,62,60,339 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 56,81,197 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 96,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 329 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 173,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 892 பேர் மரணமடைந்துள்ளனர். அதே போல பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 104,012 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 280 பேர் பிரேசில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,21,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 617 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 249,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 104,065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications