Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் சொன்ன அந்த வார்த்தை.. 300 கிலோ உடல் எடை பாதியாக குறைப்பு.. ஹேப்பிதான் ஆனாலும் ஒரு சோகம்

அமெரிக்காவை சேர்ந்த 42-வயது நபர் ஒருவர் தனது உடல் எடையை 300 கிலோவில் இருந்து 165 கிலோவாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைக்காவிட்டால் 5 வருடத்தில் இறந்து விடுவீர்கள் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருந்தார்களாம்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கிட்டதட்ட 300 கிலோவில் இருந்து தனது உடல் எடையை 165 கிலோவாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைக்காவிட்டால் 5 வருடத்தில் இறந்து விடுவீர்கள் என்று மருத்துவர்கள் கொடுத்த எச்சரிக்கையால் ஜங்க் ஃபுட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு உடல் எடையை வேகமாக குறைத்து இருக்கிறார்.

அதீத உடல் எடை பல்வேறு நோய்களுக்கு வித்திடும் என்பது அனைவரும் அறிந்ததே.. அந்த வகையில் தான் அமெரிக்கவை சேர்ந்த 42 வயது நிக்கோலஸ் கிரப்ட் என்ற நபர் 300 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதிகப்படியான உடல் எடை காரணமாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்தித்த நிக்கோலஸ் கிராப்ட் மருத்துவரை பார்த்துள்ளார். மருத்துவர் சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு ஆடிப்போன நிக்கோலஸ் கிராப்ட் உடனடியாக தனது உடல் எடையை குறைக்கத் தொடங்கியிருக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு:-

 300 கிலோ உடல் எடை

300 கிலோ உடல் எடை

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தை சேர்ந்தவர் நிகோலஸ் கிரப்ட். இவருக்கு சிறு வயதில் இருந்தே உடல் எடை அதிமகாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சுமார் 300 கிலோ உடல் எடையை தொட்டு விட்டாராம். இதனால், எங்கு சென்றாலும் கடும் சிரமத்தை சந்திக்க நேர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் இருந்துள்ளார். மூச்சு விடுவதில் சிரமம், மூட்டு வலி என வரிசையாக உடல் உபாதைகள் வரிசை கட்டி வந்துள்ளன.

5 ஆண்டுகளுக்குள் எடையை குறைக்காவிட்டால்

5 ஆண்டுகளுக்குள் எடையை குறைக்காவிட்டால்


இதனால், நொந்து போன நிகோலஸ் கிராப்ட் மருத்துவரை சந்தித்துள்ளார். இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவரை பார்த்துள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர் உடல் எடை மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டது. இன்னும் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் உடல் எடையை குறைக்காவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து என்று எச்சரித்து இருக்கிறார். இதனால் அச்சத்தில் உறைந்து போன நிக்கோலஸ் கிராப்ட் உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.

ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை..

ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை..

இதற்காக தனது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் செய்து இருக்கிறார். இதற்கும் நல்ல ரிசல்ட் கிடைத்ததாம். முதல் மாதத்திலேயே 18 கிலோ எடை குறைந்து இருக்கிறார். உடல் எடையை குறைப்பதற்காக பிரத்யேகமாக எந்த ஒரு டயட்டையும் அவர் பின்பற்றவில்லையாம். நொறுக்குத்தீனி போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை அறவே நிறுத்தியுள்ளார். கலோரிகளை அதிகம் எடுத்துக்கொள்வதையும் தவிர்த்து இருக்கிறார். உடல் எடையை குறைப்பதற்கு நிகோலஸ் கிராப்டின் பாட்டியும் ஊக்கமளித்து இருக்கிறார்.

165 கிலோவாக குறைத்தார்

165 கிலோவாக குறைத்தார்

தற்போது 165 கிலோவாக தனது எடையை குறைத்து விட்டதாக கூறுகிறார் நிகோலஸ். ஆனால், துரதிர்ஷ்டவசமாக உடல் எடையை குறைக்க ஊக்கமளித்த அவரது பாட்டி தற்போது உயிருடன் இல்லையாம். உடல் எடையை குறைத்துள்ளதால் தோல் சுருக்கம் உள்ளிட்ட சில தொந்தரவுகள் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார். ஜங் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்தி பெரிதாக உணவுக்கட்டுப்பாடு எதுவும் இன்றியே கிட்டதட்ட 4 ஆண்டுகளில் உடல் எடையை 300 கிலோவில் இருந்து 165 கிலோவாக குறைத்து காட்டிய நிகோலஸ் கிராப்ட் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+