அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆப்பு.. H-1B விசா ஏற்கனவே இருந்தாலும் கூடுதல் கட்டணம்! டிரம்ப் தடாலடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: H-1B விசா விதிகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கையாக, ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்களின் H-1B மற்றும் L-1 விசாக்களை நீட்டிப்பதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புதிய விதியை அமல்படுத்த டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த விசாக்களில் இந்தியர்களே அதிகம் வேலை செய்யும் நிலையில், இந்த புதிய விதி அமலுக்கு வந்தால், விசா நீட்டிப்புகளுக்கும் இந்த கட்டணம் விதிக்கப்படும். இதனால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுமின்றி சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் கூட கட்டுப்படுத்த விரும்புகிறார். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பதே அவரது வாதமாக இருக்கிறது.

US Donald Trump india

விசா உத்தரவு

அதன் ஒரு பகுதியாகவே கடந்தாண்டு திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக டிரம்ப் அரசு உயர்த்தியது. இருப்பினும், இதுபோல விசா கட்டணத்தை உயர்த்த டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்தச் சூழலில் தான் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, எல்லைப் பாதுகாப்பு அமைப்பு இணைந்து புதிய விதிகளை கொண்டு வர டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. H-1B மற்றும் L-1 விசாக்களுக்கு கூடுதல் கட்டணத்தை விதிக்கும் இந்த திட்டம் குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் என்பது புதிய H-1B மற்றும் L-1 விசாக்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்களின் விசா நீட்டிப்பு விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது..

யாருக்கு பொருந்தும்!

இந்த விதி, அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் H-1B அல்லது L-1 விசாவில் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது இந்த நிறுவனங்கள் புதிய H-1B விண்ணப்பத்திற்கு 4,000 டாலர், புதிய L-1 விண்ணப்பத்திற்கு 4,500 டாலர் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றன. புதிய விதி அமலுக்கு வந்தால், ஒவ்வொரு முறை விசா நீடிக்கப்படும்போதும் இதே கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியர்களுக்கு பாதிப்பு

இந்த மாற்றம் இந்தியர்களையே அதிகமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவில் அதிகபட்ச ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் இந்தியர்கள் தான். 2025ல் மொத்தம் 4.06 லட்சம் H-1B விசாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2,91,542, அதாவது 72% ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களின் விசா நீட்டிப்புகளாகும். இதில் 2,26,359 பேர் இந்தியர்கள். அதாவது, H-1B விசா நீட்டிப்புகளில் 77.6% இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய கட்டணம் என்பது இந்தியர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்களுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

அமெரிக்க நிறுவனங்கள்

H-1B விசாவை அதிகமாக பயன்படுத்தும் அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்தியாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற ஐடி நிறுவனங்களும் இந்த மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படலாம். 2025ல் H-1B விசாக்களை அதிகம் பெற்ற நிறுவனமாக அமேசான் 14,532 விசாக்களுடன் முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து டிசிஎஸ் (5,293), மைக்ரோசாப்ட் (4,863), மெட்டா (4,740), ஆப்பிள் (4,610), கூகுள் (4,509) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+