ஏன் டிரம்ப் பதவி விலக வேண்டும்? யார் இந்த எப்ஸ்டீன்? எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகள் இதுதான்!
வாஷிங்டன்: பிரபல நிதியாளரும் பாலியல் குற்றவாளியாகவும் அறியப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு கோப்புகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள எலான் மஸ்க், டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற கருத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
"மிகப் பெரிய குண்டை வீச வேண்டிய நேரம் இது. டொனால்ட் டிரம்ப் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறது. இப்போது வரை எப்ஸ்டீன் கோப்புகள் வெளியில் தெரியாததற்கு காரணம் இதுதான். இந்த போஸ்ட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உண்மை வெளியே வரும்" என்று எலான் மஸ்க் x தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன. யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்? இவர் ஒரு நிதியாளர். அதாவது பெரும் நிறுவனங்களுக்கு வங்கிகளிலிருந்து நிதியை பெற்று தருபவர். தவிர முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றியிருந்தார். இதனால் இயல்பாகவே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரிய புள்ளிளுடன் இவருக்கு தொடர்பு இருந்தது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இவர் மீது பல குற்றச்சாட்கள் எழுந்தன. கரீபியன் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' எனும் தீவில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் 2008ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனை காலம் கொஞ்ச நாட்கள்தான். எனவே விரைவில் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் 2019ல் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இப்படி இருக்கையில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே கதையை முடித்ததாக சொல்லப்படுகிறது.
எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களில் (எப்ஸ்டீன் பைல்கள்) பல பிரபலமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இவரது வழக்கு ஆவணங்கள் பொது வெளியில் பகிரப்படவில்லை. இந்த ஆவணங்களில் டிரம்ப்பின் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் தற்பொது குற்றம்சாட்டியுள்ளார். இதனால்தான் ஆவணங்கள் பொதுவில் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மட்டுமல்லாது, டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவருக்கு பதிலாக ஜே.டி.வான்ஸ் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று x பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதை தனது பக்கத்தில் பகிரந்த மஸ்க், 'ஆமாம்' என்று பதிலளித்துள்ளார். அதாவது டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதில் தனக்கும் உடன்பாடு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications