கார் பாதி.. ராக்கெட் மீதி! அசத்தி காட்டிய டெஸ்லா! எலான் மஸ்க் செய்த மேஜிக்!
வாஷிங்டன்: கிரேஸியான கார்களை தயாரிப்பதில் டெஸ்லாதான் நம்பர் ஒன்று என்பதை எலான் மஸ்க் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார். நேற்று டெஸ்லாவின் பறக்கும் கார் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 'ரோட்ஸ்டர்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார்.. ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இந்த காரை எலான் மஸ்க் நேற்று சோதனை செய்து காட்டியிருக்கிறார். வளைந்த ரேம்ப் மீது ஏறிய இந்த கார், காற்றில் சில நொடிகள் பறந்து காட்டியது. குறிப்பாக வளைந்த ரேம்பில் சில விநாடிகள் வரை அப்படியே அந்தரத்தில் தொங்கியிருந்தது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்தது.

இது எப்படி சாத்தியம்?
காரின் அடிப்பகுதியில் உள்ள சிறப்பு ஃபேன் சக்ஷன் சிஸ்டம்தான், கார் அந்தரத்தில் தொங்க உதவி செய்திருக்கிறது. இது அதிவேகத்தில் காற்றை உள் இழுத்து, வெற்றிடத்தை உருவாக்கி.. கார் அப்படியே ரேம்ப் மீது ஒட்டிக்கொள்வதை போல செய்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த கார் நின்ற இடத்திலிருந்தே காற்றில் மேலே எழும்பி காட்டியது.
காரில் ராக்கெட் தொழில்நுட்பம்
வழக்கமாக கார்களை பறக்க வைக்க நெருப்பை கக்கும் ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த காரில்.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ராக்கெட்டுகள் விண்வெளியில் இருக்கும்போதும், பூமியிலிருந்து பறக்கும்போதும்.. திசையை மாற்ற 'கோல்டு கேஸ் த்ரஸ்டர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதே தொழில்நுட்பம்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
https://t.co/KBWjjWknXe
— Elon Musk (@elonmusk) October 16, 2026
கார் எப்படி பறக்கிறது?
காரின் உட்புறத்தில், காலியிடங்களில் சுமார் 10,000 PSI என மிக அதிக அழுத்தத்தில்.. காற்று சேமித்து வைக்கப்படும். காரை சுற்றி 10 இடங்களில் சிறிய ரக ராக்கெட் துவாரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த துவாரங்கள் வழியாக கார் பறக்க வேண்டிய நேரத்தில் அதிக அழுத்தத்தோடு காற்று கீழ் நோக்கி பீச்சியடிக்கப்படும். இதனால் கார் அப்படியே பறக்கும்.
ஒரு நொடிக்கும் குறைவான நேரம்
காரின் அடிப்பகுதியிலும் பக்கவாட்டிலும் உள்ள த்ரஸ்டர்கள், கார் காற்றில் இருக்கும்போது அது தலைகீழாக கவிழாமல் சமநிலைப்படுத்துகின்றன. இதிலுள்ள எலக்ட்ரிக் ஆக்சுவேட்டர்கள், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மிகத் துல்லியமாக எந்த துவாரத்தில் எவ்வளவு காற்று வெளியேற வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி காரை காற்றில் நேராக நிலை நிறுத்தி பாதுகாப்பாக தரை இறக்குகின்றன.
தனியாக எரிபொருள் தேவையில்லை
என்னதான் த்ரஸ்டர்கள் இருந்தாலும் கார் பறக்க வேண்டும் எனில்.. எடை குறைவாக இருக்க வேண்டும். எனவே காரின் எடையை குறைக்க.. மெக்னீசியம், டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர் ஆகிய இலகுரக பொருட்களால் கார் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. த்ரஸ்டருக்கான காற்று தீர்ந்தவுடன் காரின் பேட்டரி மூலம் இயங்கும் ஏர் கம்ப்ரஸர் தானாகவே வெளியிலிருந்து காற்றை உறிஞ்சி மீண்டும் டேங்குகளை நிரப்பிக்கொள்ளும். எனவே கார் பறக்க.. தனியாக எரிபொருள் எதையும் அடிக்க தேவையில்லை.
Roadster event livestream https://t.co/G0jU4mWfid
— Tesla (@Tesla) October 15, 2026
இவ்வளவு செலவு செய்தும் வேஸ்டா?
அதேபோல காரின் பின்புறமும் த்ரஸ்டர்கள் இருக்கின்றன. இது வெறும் 0.81 விநாடிகளில் 96 கி.மீ வேகத்தில் காரை உந்தி தள்ளும். இந்த கார் சாதாரண ரோடுகளில் பறப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைக்குமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றும்.. இந்த சோதனைக்கு முன்பு வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றும் எலான் மஸ்க் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த 2ம் தலைமுறை ரோட்ஸ்டர் கார் முதன் முதலில் 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு.. 2020ல் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால்.. பல்வேறு தமதங்களுக்கு பிறகு தற்போது இதன் அதிகாரப்பூர்வ உற்பத்தி 2028ம் ஆண்டு தொடங்கும் என்று டெஸ்லா அறிவித்திருக்கிறது.
விபத்திலிருந்து தப்பிக்க உதவுமா?
இந்த காரை மணிக்கு 200 கி.மீ வேகத்தில் சென்னை-பெங்களூர் ஹைவேயில் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் எனில்.. குறுக்கே லாரி வந்தால் கூட தப்பித்து விடலாம். விபத்து ஏற்படப்போகிறது என்று தெரிந்த உடன்.. த்ரஸ்டர்கள் இயங்கி கார் அப்படியே வானத்தில் பறந்து பத்திரமாக வேறு ஒரு இடத்தில் தரையிறங்கும். இல்லையெனில் பவர் பிரேக்கிங் சிஸ்டம் ஆன் ஆகி.. கார் சீக்கிரமாகவே நின்றுவிடும். இந்த காரின் பிரேக்கிங் சிஸ்டம் கொஞ்சம் வித்தியாசமானது.
சாதாரணமாக பிரேக் அடித்தால்.. கார் வழுக்கிக்கொண்டு போகும். ஆனால், இந்த காரின் முன் பகுதியில் த்ரஸ்டர் இருப்பதால் அது வேலை செய்து வேகத்தை குறைக்கும். இதனால் கார் குறைந்த தூரத்திலேயே நின்றுவிடும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 200 கி.மீ வேகத்தில் போகும் கார் உடனே நிற்பதால்.. உள்ளே இருக்கும் மனிதர்களின் உடல் அதிக G- விசையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இது மட்டும்தான் பிரச்சனை!


Click it and Unblock the Notifications
