"டிராகன்" தெரியுமா.. டிரம்ப்பிற்கு எலான் மஸ்க் தந்த மிரட்டல்.. ஒரு நொடி அதிர்ந்த அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அளிக்கப்படும் மானியங்களை நிறுத்தப்போவதாக டிரம்ப் எச்சரித்த நிலையில், டிராகனை வைத்து அதற்கு எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபரான டிரம்பிற்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கும் இடையே கடந்த சில காலமாகவே நல்ல நட்பு இருந்தது. ஆனால், அந்த நட்பு இப்போது பகையாக மாறிவிட்டது. இருவரும் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்கை விமர்சித்த டிரம்ப் தனது ஒரு போஸ்ட்டில், "நமது பட்ஜெட்டில் பல பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, எலானுக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும். பைடன் அரசே அதைச் செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது!" என்று பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் பெரும் பேசுபொருள் ஆனது. என்ன தான் கருத்து வேறுபாடு என்றாலும் ஒரு அதிபர் இதுபோல வெளிப்படையாகக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக மிரட்டல் விடுக்கலாமா எனக் கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர் டிரம்ப் அதிபராகிப் பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பைடன் அரசைக் குறைகூறுவது எந்த விதத்தில் சரி என்று கேட்டனர்.
டிராகன் மிரட்டல்
டிரம்பின் இந்த போஸ்ட்டிற்கு ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்கே பதிலளித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எனது அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அதிபர் கூறியிருக்கிறார். இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் டிராகன் விண்கலத்தை உடனடியாக நிறுத்தவுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இது இரு தரப்பிற்கும் இடையேயான பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.
ஏன் முக்கியம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லவும், அங்கிருந்து திரும்பப் பூமிக்கு அழைத்து வரவும் சுமார் $4.9 பில்லியன் மதிப்பில் ஸ்பேஎஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக நாசா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தைத் தான் நம்பியுள்ளது. தற்போதைய சூழலில் மனிதர்களை விண்வெளிக்குக் கூட்டிச் செல்லும் திறன் கொண்ட ஒரே அமெரிக்க விண்கலம் இந்த டிராகன் மட்டுமே.
இந்தச் சூழலில் திடீரென டிராகன் விண்கலம் செயல்பாட்டை நிறுத்தினால் அது நாசாவின் திட்டத்தையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் திட்டத்தையும் மொத்தமாகச் சீர்குலைக்கும். இது அமெரிக்கா மட்டுமின்றி 20+ நாடுகளைக் கொண்டதாகும். டிராகனை தவிர்த்துப் பார்த்தால் தற்போது ரஷ்யாவின் சோயஸ் விண்கலனால் மட்டுமே வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல முடியும். எனவே, அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இந்த டிராகன் தான்.
இறங்கி வந்த எலான் மஸ்க்
அமெரிக்காவுக்கு இந்தளவுக்கு முக்கியமானதாக உள்ள டிராகன் விண்கலனை எடுத்தேன் கவிழ்த்தேன் என நிறுத்துப்போவதாக எலான் மஸ்க் சொன்னது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கை மிகக் கடுமையாகச் சாடி நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், "நல்ல அட்வைஸ்.. சரி, நாங்கள் டிராகனை நிறுத்த மாட்டோம்" என பதிவிட்டார்.
வேறு பலரும் டிராகன் குறித்த எலான் மஸ்கின் போஸ்ட்டிற்கு அதிருப்தி தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டனர். அப்போது எலான் மஸ்க் அமெரிக்கக் கொடியைப் பகிர்ந்து டீம் அமெரிக்கா என்ற மற்றொரு போஸ்ட்டை பதிவிட்டிருக்கிறார். டிராகன் மிரட்டலில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கினாலும் டிரம்ப், எலான் மஸ்க் மோதல் தொடரவே செய்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications