வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மர்மம்.." வேறு கேலக்ஸியில் இருந்து திடீர் திடீரென வரும் சிக்னல்.. விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் மனிதர்களை போன்ற உயிரினங்கள் உள்ளதா என்ற ஆய்வில் முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

பூமியைப் போலவே வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பதைக் கண்டறிய உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதில் தீவிரமாக இறங்கி உள்ளது.

வாக்குச்சீட்டை காட்டினார்.. ஹெச். டி. ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..பாஜக புகார் வாக்குச்சீட்டை காட்டினார்.. ஹெச். டி. ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..பாஜக புகார்

இதற்காகப் பிரபஞ்சத்தில் ரேடியோ சிக்னலை அனுப்பும் வேலைகளிலும் நாசா இறங்கி உள்ளது. இதற்கு எதாவது பதில் கிடைத்தால் அது வேற்று கிரக வாசிகளின் இருப்பை உறுதி செய்வதாக அமையும் என ஆய்வாளர்கள் நம்பினர்.

 வேறு கேலக்ஸி

வேறு கேலக்ஸி

இந்தச் சூழலில் வானியலாளர்கள் சிலர் விண்வெளியில் இருந்து வரும் ரேடியோ சிக்னலைக் கண்டறிந்துள்ளனர். இந்த சிக்னல் எங்கிருந்து அனுப்பப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புகிறது. கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாக நம்பப்படும் விண்மீன் மண்டலத்தில் இருந்து இந்த சிக்னல் வருகிறது. FRB 20190520B என அழைக்கப்படும் இந்த சிக்னல ஏலியன்கள் குறித்தும் அதன் தோற்றம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.

 சில மில்லி நொடிகள்

சில மில்லி நொடிகள்

இந்த சிக்னல் சிறிய ஹோஸ்ட் விண்மீனில் இருந்து பெறப்பட்டு உள்ளது. இந்த சிக்னல் தோன்றிய இடத்தின் அருகே இருக்கும் மற்றொரு பொருள் பலவீனமான ரேடியோ சிக்னலை வெளியிடுகிறது. இந்த வகையான சேர்க்கை மற்றொரு FRBஇல் மட்டுமே காணப்பட்டது. FRB என்றால் மிகச் சில மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கும் ரேடியோ அதிர்வெண் ஃப்ளாஷ்கள் ஆகும். சில மில்லி நொடிகள் மட்டுமே வந்தாலும் கூட இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

 75 சிக்னல்கள்

75 சிக்னல்கள்

இருப்பினும், விஞ்ஞானிகள் இன்னும் இந்த நிகழ்வை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. முதலில் இந்த வகை சிக்னல் 2007இல் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு பல நேரங்களில் இதுபோன்ற சிக்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2020 முதல் செப். 2020 வரை மட்டும் ஆய்வாளர்கள் இதுபோல சுமார் 75 சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற சிக்னல்களுக்கு இடையே சில வீக்கான சிக்னல்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கேள்விகள்

கேள்விகள்

கடந்த 2016இல் FRB 121102 என்ற சிக்னல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது இப்போது கண்டறியப்பட்ட FRB 20190520Bக்கு ஒத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்போது நமக்கு இரட்டை மர்ம கேள்விகள் எழுந்துள்ளது. முதலில் இந்த சிக்னல் அனுப்பியது யார் எனக் கண்டறிய வேண்டும். அடுத்து இந்த FRB சிக்னல் உடன் வரும் வீக்கான சிக்னல் குறித்து கண்டறிய வேண்டும்.

ஆய்வு

ஆய்வு

நியூட்ரான் நட்சத்திரத்தை விட்டுச் சென்ற சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களில் இருந்தும் இதுபோன்ற சிக்னல் எழக்கூடும் என்று தெரிவித்தனர். அதாவது கிரகம் வெடித்துச் சிதறிய உடன் இதுபோன்ற சிக்னல் குறைந்துவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது மாதம் ஒரு முறை என்ற ரீதியில் இந்த சிக்னல் மிக வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த விவகாரத்தில் பல கேள்விகளுக்கு நமக்கு இன்னும் பதில் தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்,

English summary
Astronomers have detected a radio signal coming from space: (வேறு கேலக்ஸியில் இருந்து வரும் புதிரான சிக்னல்) Radio signal coming from outer space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X