Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்களுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்க பிரான்சு முடிவு.. பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் 18 வயது முதல் 25 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில், "மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு முதலே 25 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இலவசமாக கருத்தடை சாதனங்கள் வழங்கப்படுகின்றன' என்றார்.

மைனர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்

மைனர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த டிசம்பர் மாத துவக்கத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், புத்தாண்டு முதல் பிரான்சில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தற்போது 18- 25 வயது வரையிலான இளம் வயதினருக்கு இந்த சுகாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் விரைவில் மைனர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இளம் பெண்களுக்கும்..

இளம் பெண்களுக்கும்..

இது தொடர்பாக பிரான்சின் அரசின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில் கூறும் போது, "மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனைங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது. கடந்த ஆண்டு முதலே 25 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இலவசமாக கருத்தடை சாதனங்கள் வழங்கப்படுகின்றன. எனினும் புதிய திட்டம் 18 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்களுக்கும் வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது" என்றார்.

பால்வினை நோய்களை தடுக்க

பால்வினை நோய்களை தடுக்க

முன்னதாக கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பேசும் போது பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:- பால்வினை நோய்கள் இளம் வயதினர் மத்தியில் அதிகம் பரவுகிறது. எனவே இதை தடுக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறோம். பால் உறவின் போது இளம் வயதினர் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு இது மிகவும் அவசியம் ஆகும்.

30 சதவிகிதம் அதிகரிப்பு

30 சதவிகிதம் அதிகரிப்பு

பாலியல் கல்வியில் சிறப்புமிக்கதாக நாம் இல்லை. கோட்பாட்டில் இருந்து யதார்த்த நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஆசிரியர்களுக்கு மேலும் கற்றுக்கொடுக்க வேண்டிய பகுதியாக இதுவே உள்ளது" என்றார். பிரான்சில் எஸ்டிடி என்று சொல்லப்படும் பால்வினை தொடர்பான நோய்கள் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் 30 சதவிகிதம் அதிகரித்தது. இதன் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளை பிரான்சு அரசு கொண்டு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+