700 கார், ரூ.4000 கோடி மாளிகை, 8 பிரைவேட் ஜெட்கள்.. வாயை பிளக்க வைக்கும் உலகின் பணக்கார குடும்பம்
வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பைக் கேட்டால் உங்களுக்குத் தலையே சுற்றிவிடும்.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு படுவேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு சொத்து மதிப்பு படுவேகமாக அதிகரிக்கிறது.

இதற்கிடையே துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு நம்மை மிரள வைப்பதாக இருக்கிறது. அது குறித்து நாம் பிரிவாகப் பார்க்கலாம்.
மாளிகை: இந்த குடும்பத்திடம் ரூ. 4,078 கோடி மதிப்பில் ஒரு மிகப் பெரிய மாளிகை இருக்கிறது. இது அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனை விட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், அவர்களுக்குச் சொந்தமாக எட்டு தனியார் ஜெட் விமானங்களும் உள்ளன. மேலும், ஒரு பிரபல கால்பந்து கிளப்பும் இவர்கள் வசம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் குடும்பத்திற்குத் தான் இந்த சொத்தாகும். அவருசன் 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். மேலும், அமீரகத்தின் அரசு குடும்பத்தில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
கச்சா எண்ணெய் ரிசர்வ்: உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ரிசர்வில் சுமார் 6% இந்த ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது. மேலும், சர்தேச அளவில் புகழ்பெற்ற புட்பால் கிளப்பான மான்செஸ்டர் சிட்டி கிளப்பை சமீபத்தில் தான் இந்த அரசு குடும்பம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பாடகி ரிஹானாவின் பியூட்டி பிராண்ட் ஃபென்டி முதல் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல முக்கிய நிறுவனங்களிலும் இவர்கள் முதலீடுகளைச் செய்துள்ளனர்.
அமீரக அதிபரின் இளைய சகோதரர் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யானிடம் 700க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.. இதில் ஐந்து புகாட்டி வேய்ரான்கள், லம்போகினி ரெவென்டன், மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே ஜிடிஆர், ஃபெராரி 599 எக்ஸ்எக்ஸ் மற்றும் மெக்லாரன் எம்சி12 என பல சொகுசு கார்கள் உள்ளன.
மிக பெரிய மாளிகை: அபுதாபியில் உள்ள கில்டட் காஸ்ர் அல்-வதன் அதிபர் மாளிகையில் தான் இந்த குடும்பம் இப்போது வசித்து வருகிறது. அமீரகத்தில் இருக்கும் பல அரண்மனைகளில் இதுதான் மிகப்பெரியது. சுமார் 94 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாளிகை சுமார் 350,000 படிகங்களால் ஆனது. இதில் பல வரலாற்று மதிப்புமிக்க கலைப்பொருட்கள் உள்ளன.
அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் என்பவர் தான் குடும்பத்தின் பிரதான முதலீட்டு நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகிறார். இந்த முதலீட்டு நிறுவனத்தின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 28,000 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது $235 பில்லியன் மதிப்புள்ள இந்த நிறுவனம் விவசாயம், எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்கள் எனப் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.
சொத்துகள்: இந்த குடும்பத்திற்கு ஐக்கிய அமீரகத்தைத் தவிர பாரீஸ் மற்றும் லண்டன் என உலகின் முக்கிய நகரங்களிலும் சொத்துகள் உள்ளன. குறிப்பாகப் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பல முக்கிய சொகுசு குடியிருப்புகள் இவர்கள் வசம் இருக்கிறது.. இதனால் அவர்களை "லண்டன் நில உரிமையாளர்" என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு அமீரக அரசு குடும்பத்தினருக்குச் சொத்துகள் உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில், இவர்களின் முதலீட்டு நிறுவனம் பிரிட்டனில் இருக்கும் கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டியை ₹ 2,122 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டர் சிட்டி, மும்பை சிட்டி, மெல்போர்ன் சிட்டி மற்றும் நியூயார்க் சிட்டி கால்பந்து கிளப்புகளை இயக்கும் சிட்டி கால்பந்து குழுமத்தின் 81 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications