வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க இது..! வானத்தில் இவ்ளோ பெரிய ஜெல்லி மீனா? வாய்பிளந்த அமெரிக்க மக்கள்! இதுதான் காரணமா..!?

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இரவில் வான்பகுதியில் திடீரென பிரம்மாண்டமாக ஜெல்லி மீன் போன்ற ஒரு உருவம் தோன்றிய நிலையில், அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகின் முதல் பெரும் பணக்காரரும் அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ஸ்பெஷலாக ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வரும் நிலையில் , அவற்றுள் முக்கியமான ஒரு திட்டம் இணைய சேவை ஸ்டார்லிங்க்.

ஸ்டார்லிங் திட்டம்

ஸ்டார்லிங் திட்டம்

உலகம் முழுவதும் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் எலான் மஸ்க் துவங்கிய ஸ்டார்லிங் திட்டம் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அதிக அளவில் கைகொடுத்தது. இதனால் ரஷ்யாவின் பகைக்கும் ஆளானார் எலான். இந்த ஸ்டார்லிங் திட்டத்தின்படி சுமார் 2000 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி அதன்மூலம் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

பால்கன் ராக்கெட்

பால்கன் ராக்கெட்

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி 53 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ். புளோரிடா மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட பால்கன் ராக்கெட்டில் இந்த 53 செயற்கை கோள்களும் பூமியின் வெளிப்பகுதில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் கூறியுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்தபடி பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்த போது திடீரென வானில் வர்ணிக்க முடியாத வார்த்தைகளால் ஒரு அற்புத நிகழ்வு தோன்றியது.

அற்புத காட்சி

விண்ணில் பறந்த ராக்கெட்டின் எக்சாஸ்ட்டரில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறிய புகை வளிமண்டலத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பிரம்மாண்டமான ஜெல்லி மீன் போன்ற ஒரு உருவம் வானில் தோன்றியது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் இந்த அற்புதமான காட்சியை கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆச்சரியத்தில் மக்கள்

பலர் இந்த காட்சிகளை புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அப்போது தற்போது அவை மிக வேகமாக பரவி வருகின்றன. பால்கன் ராக்கெட் செலுத்தப்படும் சில மணிநேரங்களுக்கு முன்பு தான் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நிறுவன ஆராய்ச்சியாளர்கள் பூமிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
As a giant jellyfish-like figure suddenly appeared in the night sky in the US state of Florida, its video and photos are spreading fast on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X