எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ.. அது நடந்துடுச்சு! 3 நிறுவனங்களை ஹேக் செய்த Google Gemini AI

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) ஒரு காலத்தில் நம்முடைய கையை மீறி போய்விடும் என்று எல்லோருக்கும் பயம் இருந்தது. இந்த பயம் உண்மைதான் என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. அதாவது கூகுளின் ஜெமினி ஏஐ, 3 நிறுவனங்களை ஹேக் செய்திருக்கிறது.

நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் என்றும், அந்நிறுவனங்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் கூகுள் கூறியிருக்கிறது.

Google s Gemini AI

ஏஐ மாடல்களின் பாதுகாப்பு திறன்களை மதிப்பிடுவதற்காக 'இர்ரெகுலர்' என்ற நிறுவனம் கடந்த மே மாதம் ஜெமினி ஏஐ ஏஜெண்டுகளுக்கு ஒரு சோதனையை நடத்தியது. ஏஜெண்டுகளுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. டாஸ்கின்படி, கூகுள் ஜெமினி ஏஐ கற்பனையான ஒரு நிறுவனத்தின் தகவல்களை ஹேக் செய்ய வேண்டும். அதாவது இல்லாத ஒரு நிறுவனத்தின் தகவல்களை ஹேக் செய்து தருவதை போன்று.. தகவல்களை ஜெமினி கொடுக்க வேண்டும்.

இதில் ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது. அதாவது ஜெமினிக்கு இன்டெர்நெட் அக்சஸ் கிடைத்துவிட்டது. எனவே, இணையத்தில் கிடைத்த பொதுவான தகவல்களை பயன்படுத்தி, 3 நிஜ நிறுவனங்களின் பாஸ்வேர்டுகளை ஜெமினி ஏஐ தானாகவே யூகித்து கண்டறிந்தது. பின்னர் அவற்றின் கம்ப்யூட்டர் செக்யூரிட்டியை உடைத்து உள்ளே நுழைந்தது. இதெல்லாம் நடந்த பிறகு.. நாம் நுழைந்தது உண்மையான நிறுவனங்களின் சிஸ்டம்களில் என்பதை உணர்ந்து, ஜெமினி தனது ஹேக்கிங் செயல்பாட்டை தானாவே நிறுத்திக்கொண்டது. இதனால் அந்த நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை மே மாதம் கூகுள் கண்டறிந்தாலும், தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. முதலில் இது குறித்த செய்தி 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையிலும், பின்னர் பிபிசி, ராய்ட்ர்ஸ் போன்ற செய்தி ஊடகங்களிலும் வெளியாகின.

சரி ஜெமினிதான் இந்த தவறை செய்கிறது என்று நினைத்தால்.. கிடையாது. வேறு சில ஏஐ மாடல்களும் இதையேதான் செய்திருக்கின்றன. OpenAI(ChatGPT), Anthropic(Claude), Meta(Llama) ஆகியவற்றின் ஏஐ மாடல்களும் இதேபோல பாதுகாப்பு சோதனைகளின்போது தப்பித்து சென்று நிஜ நிறுவனங்களை ஹேக் செய்திருக்கின்றன. குறிப்பாக OpenAI நிறுவனத்தின் ஏஐ ஏஜெண்டுகள் தங்களுக்குள் ஒரு ரகசிய மெசேஜ் போர்டை உருவாக்கி.. தகவல்களை ஷேர் செய்து, Hugging Face என்ற பிரபல ஏஐ நிறுவனத்தின் உள்கட்டமைப்பையே ஹேக் செய்தது.

இந்த தொடர் சம்பவங்களால்.. ஏஐ ஏஜெண்டுகளின் தானாக இயங்கும் செயல்பாடு எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. எனவே தற்போது ஏஐ பாதுகாப்பு குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் தீவிரமடைந்திருக்கின்றன.

எதுவாக இருந்தாலும், கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரைதான் அத நல்லது. ஏஐ மாடல்களும் அப்படித்தான். எனவே, ஏஐ நிறுவனங்கள் இந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+