வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

320 அடி உயரத்தில் வானில் மிதந்தாரா விண்வெளி வீரர்.. தீயாய் பரவும் போட்டோ.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்வெளி வீரர் ஒருவர் விண்கலத்தின் எந்த துணையுமின்றி வானத்தில் மிதந்த ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா இல்லை கட்டுக் கதைகளா என்பதை பார்ப்போம்.

நவீன உலகத்தில் மருத்துவம், விண்வெளி, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு சாதனங்கள் என பல துறைகளில் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. விண்வெளியில் புதிய புதிய சாகசங்களை நாம் செய்திகளில் அறிகிறோம். அந்த வகையில் ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி அந்த புகைப்படமே போலியானது என கூறி வருகிறார்கள்.

அதுவும் உண்மையான புகைப்படத்தை, உண்மை நிகழ்வை இவர்கள் போலி என்கிறார்கள். அப்படி என்ன புகைப்படம் என்பதை பார்ப்போம். ஜான் பாம்பிலியானோ என்பவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளார். அதில் பூமியில் மலைகளுக்கு மேல் அதாவது வானத்தில் ஒருவர் மிதப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எத்தனை பைத்தியகாரத்தனம் பாருங்கள்.

விண்கலம்

விண்கலம்

புரூஸ் மெக்கேண்ட்லெஸ் எனும் விண்வெளி வீரர் வானில் எந்த விண்கலத்தின் துணையுமின்றி மிதக்கிறாராம். இது போல் வானில் மிதந்த முதல் நபர் இவர்தான் என்கிறார்கள் என அவரது ட்வீட்டரில் ஜான் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள். மிகவும் கேளிக்கையாக இருக்கிறது. எத்தனை பேர் இதை நம்புவார்கள் என ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விண்வெளி

விண்வெளி

அது போல் இன்னொரு அந்த விண்வெளி வீரரின் இமேஜ் ஒரு கிளிப் ஆர்ட் என கூறி அதை ஜூம் செய்து காட்டியுள்ளார். இன்னொருவர் இமேஜ்களை கம்ப்ரெஸ் செய்யும் விந்தையான உலகத்திற்கு வரவேற்கிறோம் என கிண்டல் செய்துள்ளார். இவர்கள் கிண்டல்களுக்கு மத்தியில் கிரிப்டோ சைபர் போலீஸ் ஒரு ட்வீட் போட்டுள்ளது.

புரூஸ் மெக்கேண்டலஸ்

புரூஸ் மெக்கேண்டலஸ்

அதில் விண்வெளி வீரர் புரூஸ் நிஜமாகவே இந்த சாகசத்தை 1984 ஆம் ஆண்டு நடத்தினார். அவருடைய பெயரை கூகுளில் சோதனை செய்து பாருங்கள். இந்த புகைப்படம் நிஜமாகவே போட்டோஷாப் செய்யப்பட்டது. கீழே மலை போன்ற பகுதிகள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் நிஜமாகவே வானில் மிதந்தார். அவர் 2017ஆம் ஆண்டு காலமானார். எனவே தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

170 மைல் தூரம்

170 மைல் தூரம்

இந்த புகைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வைரலானது. இது உண்மையான படம்தான். புரூஸ் எனும் விண்வெளி வீரர் 320 அடி உயரத்தில் பூமியிலிருந்து 170 மைல்கள் தூரத்தில் மிதந்தார். இதுவரை எடுக்காத சிறந்த விண்வெளி சார்ந்த படம் இதுதான் என்கிறார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். வானில் விண்கலத்தின் துணையின்றி நடக்கலாம் என்பது உண்மை.

நாசா

நாசா

1984 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது இந்த புகைப்படம். நாசாவும் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆனால் நாசா வெளியிட்ட புகைப்படத்தில் மலை தொடர்களை தெரியவில்லை. எனவே உண்மையான சாகசம் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டோஷாப் என கூறிய சம்பவம் இணையத்தை பரபரப்பாகின.

English summary
Image goes viral in Social Media that an astronaut floating in space untethered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X