உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடம் பிடித்த இந்தியா.. ஒரே நாளில் 89,019 பேருக்கு தொற்று!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்துக்கு சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,019 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகரிப்பு

கொரோனா அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பாரபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 130,801,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,850,148பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 105,294,879 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் தொடரும் பாதிப்பு

அமெரிக்காவில் தொடரும் பாதிப்பு

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 69,968 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 1,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 69,662பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,807 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

இந்தியா முதல் இடம்

இந்தியா முதல் இடம்

இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. தற்போது இந்தியா தினசரி கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,019 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 713 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 6,59,928 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 3,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 52 பேர் பலியாகியுள்ளனர்.

பிரான்சில் கொரோனா ஆதிக்கம்

பிரான்சில் கொரோனா ஆதிக்கம்

பிரான்சில் 46,677பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 304 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 21,932 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 481 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 400 பேர் பலியாகியுள்ளனர். துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 42,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+