தப்பிய அதிபர் கானி.. தலிபான்களுக்கு எதிராக போராட தயாரில்லாத ஆப்கன்.. நாங்கள் ஏன் போராடணும்.. ஜோபிடன்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெரும் முடிவில் உறுதியாக உள்ளதாக அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அமெரிக்காவுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடிகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது என்பது அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க ராணுவம் அங்கு சென்றது.
அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிவிட்டதால் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது. தலிபான்களை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையில் உதவியது. தலிபான்களுக்கு எதிராக போராடாமலேயே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துவிட்டது.

ஆப்கானிஸ்தான் ராணுவம்
ஆப்கானிஸ்தான் ராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்கமுடியாது. ஆப்கன் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தலிபான்களின் வெற்றிக்கு காரணம். ஆப்கானிஸ்தான் தற்போதைய நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

ஆப்கானில் அமெரிக்க படைகள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் முடிவில் உறுதியாக உள்ளேன். அதே வேளையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அமெரிக்க சொத்துகளை தலிபான்கள் சேதப்படுத்தினால் பதிலடிகள் மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர்
ஆப்கானிஸ்தான் குறித்து சுமார் 15 நிமிடங்கள் அவர் பேசியுள்ளார். அதில் நான் அமெரிக்க அதிபர். எனது பொறுப்பு என்னை தடுத்து நிறுத்தியுள்ளது. நாங்கள் பல டிரில்லியன் டாலர்களை செலவு செய்துவிட்டோம். ஆப்கானியர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தோம். முடிவுக்கு வராத இந்த போரில் எத்தனை தலைமுறைக்குத்தான் அமெரிக்க குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பர்?

அஷ்ரப் கானி
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி போராடுவதற்கு நாட்டை தயார் செய்ய தவறிவிட்டார். கடந்த ஜூலை மாதம் அவருடன் தொலைபேசியில் நான் பேசிய போது எங்கள் உரையாடல் தெளிவாக இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போருக்கு தயாராவது குறித்து பேசினோம். அரசாங்கத்தில் உள்ள ஊழலை ஒழிப்பது குறித்தும் பேசினோம். அப்போதுதான் அரசாங்கம் மக்களுக்காக பணியாற்றும். அரசியல் தலைவர்களும் ஆப்கானின் தேவைக்காக ஒன்றிணைவர் என கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் அனைத்தையும் செய்ய தவறிவிட்டனர் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications