வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி போட்ட ஜோ பிடன்... அடுத்த வாரம் கமலா ஹாரீஸ்.. டிரம்ப் மட்டும் தொடர்ந்து மவுனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பிடன் (ஜோ பைடன்) இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலலா ஹாரீஸ் குடும்பத்தினருடன் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட உள்ளார்.

உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் மிக மோசமான அழிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 1,84,73,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,26,772 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

Kamala Harris to get Covid vaccine next week

உலகின் பிற நாடுகளைப் போல அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.

இந்த நிலையில் நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் புதிய அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பிடன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக நேரலையில் செலுத்திக் கொண்டதாக ஜோ பிடன் கூறினார்.

மேலும் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரீஸ் குடும்பத்தினருடன் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள இருக்கிறார். ஆனால் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் இது பற்றி வாயே திறக்காமல் உள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல்

ஏற்கனவே பிரேசில் அதிபர், கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் ஃபைசர் நிறுவனம் பொறுப்பாகாது என பீதி ஏற்படுத்தி இருந்தார். டொனால்ட் டிரம்ப்போ, தடுப்பூசி போடுவது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
US Vice President-elect Kamala Harris and her husband will get Covid vaccine next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X