ஈரானை மொத்தமாக அழிக்க திட்டமா? ஐநா சபையில் டிரம்ப் சொன்ன வார்த்தை.. வெளியேறிய ஈரான் பிரதிநிதிகள்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அந்த நாட்டை மேம்படுத்த உதவுவதா? இல்லாவிட்டால் ஈரானை மொத்தமாக அழிப்பதா? என்பது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் ஐநா பொதுச்சபையில் விளக்கம் அளித்துள்ளார். இந்த சமயத்தில் அங்கிருந்த ஈரான் பிரதிநிதிகளின் குழு வெளியேறியது.

make-deal-or-restart-attacks-on-iran-donald-trump-explained-in-un

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநாவின் பொதுச்சபை உள்ளது. இந்நிலையில் உலக தலைவர்கள் ஐநாவில் பேசி வருகின்றனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பேசினார்.

ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் உள்ள நிலையில் அதுபற்றிய விஷயங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக ஈரான் உடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளுமா? இல்லாவிட்டால் ஈரானை மொத்தமாக அழித்து நரகத்தை உருவாக்குமா? என்பது பற்றி டொனால்ட் டிரம்ப் விளக்கினார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

ஈரான் விஷயத்தில் நான் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து அவர்களை முன்பை விட சிறந்த நாடாக அல்லது மத்திய கிழக்கிலேயே அல்லது உலகிலேயே மிக சிறந்த நாடுகளில் ஒன்றாக மீண்டும் கட்டமைக்க வழிவகுப்பதா? இல்லை அந்த இஸ்லாமிய குடியரசை (ஈரான்) விரைவாக அழித்து அவர்களால் மற்றவர்களை அழிக்காமல் இருக்க வாய்ப்பு வழங்குவதா? என்ற கேள்விகள் உள்ளன.

அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு அமெரிக்கா, ஈரானுடன் ஒப்பந்தம் செய்யும். தேர்தலுக்கு பிறகு உடனடியாக நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்வோம் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், ஒப்பந்தம் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு(ஈரான்) எந்த வகையிலும் அர்த்தமுள்ளதாக இருக்காது. இடைக்கால தேர்தலில் நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை பார்க்க அவர்கள் காத்திருக்கிறார்கள்'' என்றார்.

இதையடுத்து ஈரானுக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ தாக்குதல்கள் பற்றியும் டிரம்ப் பேசினார். அப்போது ஈரான் பிரதிநிதிகளின் குழு மொத்தமாக வெளியேறியது. ஒரேயொரு நபர் மட்டுமே அரங்கில் இருந்தார்.

இந்த சமயத்தில் டிரம்ப், அப்போது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கிய பல நாடுகளில் பொருளாதார நிலை மோசமாக்கியதாக கூறிய டிரம்ப், அந்த நாட்டின் மீதான 'அட்டாக்'கை டிரம்ப் நியாயப்படுத்தினார். அதுமட்டுமின்றி ஈரானை ஒருபோதும் அணுஆயுதத்தை கையில் எடுக்க விடமாட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+