வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓரினச் சேர்க்கையால் பரவும் குரங்கு காய்ச்சல்?அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன?

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : கொரோனா வைரஸ், தக்காளி காய்ச்சல் என அடுத்தடுத்து பரவி மக்களை பீதியில் ஆழ்த்தி வரும் நிலையில், அமெரிக்காவில் புதிதாக குரங்கு காய்ச்சல் எனும் அரிய வகை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதன் அறிகுறிகள் மற்றும் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்..

Recommended Video

    Monkeypox என்றால் என்ன? | Monkeypox Virus | Monkeypox Signs And Symptoms | Oneindia Tamil

    இந்த வாரம் அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி மற்றும் ஆகிய நாடுகளில் அபூர்வமான குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    இது பெரும்பாலும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் அரிய வைரஸ் என கருதப்படும் நிலையில், மேற்கத்திய நாடுகளில் பரவி வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது.

    தக்காளி காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது! அரசு டாக்டரின் முக்கிய டிப்ஸ்! தக்காளி காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது! அரசு டாக்டரின் முக்கிய டிப்ஸ்!

    குரங்கு காய்ச்சல் பாதிப்பு

    குரங்கு காய்ச்சல் பாதிப்பு

    இந்த ஆண்டின் முதல் குரங்கு காய்ச்சல் பாதிப்பை கடந்த புதன்கிழமையன்று அமெரிக்கா சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாசசூசெட்ஸில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை இதுகுறித்து விசாரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஒன்பது வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நிலவரப்படி இத்தாலியில் ஒருவருக்கும் போர்ச்சுகல்லில் 14 பேருக்கும், ஸ்பெயினில் ஏழு பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    மேற்கத்திய நாடுகளில் குரங்கு காய்ச்சலின் பாதிப்பு வரலாற்றில் மிக முக்கியமான வெடிப்பு UCLA ஃபீல்டிங் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தொற்றுநோயியல் பேராசிரியரான அன்னே ரிமோயின் கூறியுள்ளார். கடைசியாக 2003 ஆம் ஆண்டில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் 47 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அப்போது யாரும் இறக்கவில்லை. இந்நிலையில் தற்போது வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் துல்லியமாக கூற முடியவில்லை.

    எளிதில் பரவாது

    எளிதில் பரவாது

    "இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் குரங்கு பாக்ஸ் வைரஸ்-ன் துணை வேரியண்ட் போல் இருப்பதாகவும், ஆனால் இந்த குரங்கு வைரஸ் மக்களிடையே எளிதில் பரவாது என்றாலும், அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இப்போதுதான் முதன்முதலாக உறுதியாகி உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ’குரங்கு பாக்ஸ்’ வைரஸ்

    ’குரங்கு பாக்ஸ்’ வைரஸ்

    'குரங்கு பாக்ஸ்' என்பது வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. நாம் நாட்டில் ஏற்கனவே கண்டறியப்பட்ட பெரியம்மை வைரஸ் வகையைச் சார்ந்த இவ்வகை வைரஸ் 1958 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளில் இருப்பது கண்டறியப்படது. இதன் காரணமாகவே இவ்வகை வைரஸுக்கு விஞ்ஞானிகள் குரங்கு பாக்ஸ் என பெயரிட்டனர். பின்னர் இது குரங்கு காய்ச்சல் என மாறியது. 1970 ஆம் ஆண்டில் தான் மனிதனுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போதிருந்து காங்கோ மற்றும் நைஜீரியாவில் தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.

    அறிகுறிகள் என்ன?

    அறிகுறிகள் என்ன?

    2017ஆம் ஆண்டு முதல் 200 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தான் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளிலும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் தீவிரமாகிறபோது மரணம் நேரிடும். 10ல் ஒருவருக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மரண அபாயம் அதிகமாக உள்ளது. காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளது.

    ஆண்களுக்கு அதிக பாதிப்பு?

    ஆண்களுக்கு அதிக பாதிப்பு?

    கொறித்துண்ணிகள் அல்லது சிறிய விலங்குகள் கடிப்பதாலும், நோய் பாதித்த மனிதர்கள் கடித்தல் அல்லது கீறல், வேட்டையாடப்பட்ட விலங்குகளிடமிருந்து குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. மேலும் நீண்டநேரம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும்போது, பெரிய சுவாசத் துளிகளின் பரிமாற்றம் மூலமும் இது பரவுகிறது. உடல் திரவங்கள், நோய்த்தொற்றின் போது உருவாகும் காயங்கள், ஆடை அல்லது படுக்கை போன்றவை மூலமும் இது பரவுகிறது. தற்போது ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ள பாதிப்பு? ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குரங்கு காய்ச்சல் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றாக கருதப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    As the corona virus and tomato flu continue to spread, people are panicking that a rare case of a new type of monkey flu has been confirmed in the United States. Let's take a look at its symptoms and preventative measures.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X