இது என்ன பஸ் ஆ! மாறி ஏறினால் இறங்க.. விமானத்தில் ஏறிவிட்டு 1,400 கி.மீ. வீணாக பயணம்.. நொந்துபோன பயணி
டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணி கவனக்குறைவால் உதய்பூர் செல்லும் விமானத்தில் ஏறிவிட்டு 1,400 கி.மீட்டர் வீணாக பயணித்துள்ளார்.
வாஷிங்டன்: டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணி கவனக்குறைவால் தவறுதலாக உதய்பூர் செல்லும் விமானத்தில் ஏறிவிட்டார். தவறுதலாக விமானத்தில் ஏறியதால் 1,400 கி.மீட்டர் வீணாக பயணித்ததோடு ஒருநாளும் முழுவதுமாக அந்த பயணிக்கு வீணாகியுள்ளது.
பேருந்துகளில் சரியாக போர்டை பார்க்காமல் ஏறிவிட்டு வேறு ஊரில் ஒரு சிலர் இறங்கி அல்லோலப்பட்டு இருப்பார்கள். குறிப்பாக அரசு பேருந்துகள் எல்லாம் ஒரே நேரத்தில் இருப்பதால் பயணிகளுக்கு இப்படி குழப்பம் ஏற்படுவது எல்லாம் சர்வ சதாரணம் தான்.
வடிவேலு கூட ஒரு படத்தில் பேருந்து மாறிவிட்டு பயணி ஒருவரிடம் தர்ம அடி வாங்கும் காட்சி கூட மிகவும் ரசனையாக அமைக்கப்பட்டு இருக்கும்.

கவனக்குறைவால் நடக்கும் சம்பவங்கள்
அதேபோல ரயில் பயணிகளுக்கும் இந்த அனுபவம் இருந்து இருக்க வாய்ப்பு உள்ளது. சரியாக பிளாட்பார்மில் கவனிக்கமாலோ அவசர கதியில் வேறு ரயில் ஏறிவிட்டலோ பல கி.மீட்டருக்கு பயணித்து மீண்டும் மனம் நொந்து போய் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று இருப்பார்கள். கவனக்குறைவால் நடக்கும் இதுபோன்ற விஷயங்களில் வியப்பதற்கு எதுவும் இல்லை.

இது எப்படி சாத்தியம்?
ஆனால் விமானத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? போர்டிங் பாஸ்கள் முறையாக செக் செய்த பிறகே பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படும் பட்சத்தில் விமானத்தில் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.. ஆனால் உண்மையில் அப்படியான ஒரு சம்பவம் தான் டெல்லியில் இருந்து பீகார் சென்ற ஒரு பயணிக்கு நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

வேறு விமானத்தில் சென்ற பயணி
டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக கடந்த 30 ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் அப்சார் ஹூசைன் என்ற பயணி டிக்கெட்டை புக் செய்து இருந்தார். இண்டிகோ நிறுவனத்தின் 6E-214 ஏறுவதற்கு பதிலாக அந்த பயணி உதய்பூர் செல்லும் 6E-319 என்ற விமானத்தில் ஏறிவிட்டார். விமானம் உதய்பூரில் தரையிறங்கிய பிறகே அப்சார் ஹூசைனுக்கு தவறான விமானத்தில் ஏறியது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக உதய்பூர் விமான நிலைய அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை எடுத்து விளக்கியுள்ளார்.

டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு
இதையடுத்து தவறை உணர்ந்த விமான நிறுவனமும் அந்த பயணியை மீண்டும் வேறு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கிருந்து மறுநாள் பாட்னாவிற்கு அப்சார் ஹூசைன் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். தவறுதலாக விமானத்தில் ஏறியதால் 1,400 கி.மீட்டர் வீணாக பயணித்ததோடு ஒருநாளும் முழுவதுமாக அந்த பயணிக்கு வீணாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உரிய விளக்கம் அளிக்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

சிரமத்திற்கு வருந்துகிறோம்
விதிகளின் படி விமானத்தில் பயணி ஏறும் முன்பாக இரு இடங்களில் போர்டிங் பாஸ் முறையாக செக் செய்யப்பட வேண்டும். எனவே வேறு விமானத்தில் எப்படி பயணி செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் போர்டிங் பாஸை சரியாக பரிசோதிக்கவில்லை என்றும் டிஜிசிஏ விசரணையில் கண்டறிய உள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அளித்த விளக்கத்தில், "இந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications