பைசர் வேக்சினுக்கு அமெரிக்காவில் முழு அனுமதி..! அடேங்கப்பா பைசர் தடுப்பூசிக்கு.. இத்தனை சிறப்புகளா
வாஷிங்டன்: உலகிலேயே முதல்முறையாக பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், உலகிலேயே முழு அனுமதி பெற்ற முதல் கொரோனா வேக்சின் என்ற சிறப்பை பைசர் பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பை இன்னும் எந்தவொரு நாட்டினாலும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக தடுப்பூசி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் அமெரிக்கா, மக்கள் தொகையில் 50% அதிகமானோருக்கு வேக்சின் போட்டுள்ளது.

பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதி
இதற்காக பைசர், மாடர்னா, ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதியை அமெரிக்கா வழங்கியிருந்தது. குறிப்பாக, பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதி அளித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் முழும் உலகிலேயே முழு அனுமதி பெற்ற முதல் கொரோனா வேக்சின் என்ற சிறப்பை பைசர் பெற்றுள்ளது.

முழு அனுமதி என்றால் என்ன
பொதுவாக ஒரு வேக்சினின் தடுப்பாற்றல் குறித்து அறிந்து கொள்ள அதிகளவிலான மக்களிடையே மூன்றாம்கட்ட சோதனை நடைபெறும். தடுப்பூசி செலுத்தியவர்களின் உடல்நிலை, வேக்சின் தடுப்பாற்றல் ஆகியவற்றை கணகிட்டு முதலில் அவசரக்கால அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகும், பல மாதங்கள் வரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல்நிலை சோதிக்கப்படும், பக்கவிளைவுகள், தடுப்பாற்றல் கண்காணிக்கப்பட்டு முழு அனுமதி வழக்கப்படும். சுமார் 40 ஆயிரம் தன்னார்வலர்களின் சோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறார்கள் வேக்சின்
12 முதல் 15 வயதுடைய சிறார்களிடம் செலுத்த பைசர் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சிறார்களுக்கான வேக்சின் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல முழு அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் அமெரிக்க ராணுவத்தில் பைசர் வேக்சின் கட்டாயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பைசர் தடுப்பூசி
இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் மற்றொரு வேக்சினான மாடர்னா தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் தகவல்கள் வெளியானது. சுமார் 5 கோடி பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகளிலும் இந்தியா இறங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதற்கான பணிகளில் இறுதியாகும் நிலையில் உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன தொழில்நுட்பம்
பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பூசி mRNA தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டது. பழைய தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய பல மாதங்கள் வரை ஆகும். ஆனால், இந்த mRNA வேக்சின்களை சில வாரங்களில் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிகப்படியான வேக்சிகளை உற்பத்தி செய்யலாம். இந்தத் தடுப்பூசி 95% வரை பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது புதிய உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் பைசர் தடுப்பூசி வேலை செய்வதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கடந்த 2020 டிசம்பர் மாதமே பைசர் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சில நாடுகள் மட்டும்
இந்த தடுப்பூசியை மிக குறைந்த ( மைனஸ் 70 டிகிரி செல்சியல்) வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். அதேநேரம் வழக்கமான பிரிட்ஜ்களில் இதை ஒரு சில நாட்கள் மட்டுமே வைக்க முடியும். பைசர் தடுப்பூசி அதிக பலன் தந்தாலும்கூட, விலை அதிகம் என்பதாலும் மிக குறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டும் என்பதாலும் இது தற்போது வரை பெரும்பாலும் வளர்ந்த வல்லரசு நாடுகளிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications