வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பக்கத்துலேயே இருந்திருக்கானே".. பூமிக்கு அருகிலேயே ராட்சத 'பிளாக் ஹோல்'.. 'ஷாக்' ஆன விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஒரு நட்ட நடு காட்டில் இருட்டு நேரத்தில் ஓரிடமாக நின்று கொண்டு ராட்சத கறுப்பு கரடி ஒன்றினை தேடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.. ஆனால் எங்கும் கரடி இல்லாததை அறிந்து, நிம்மதி பெருமூச்சு விட்டபடி திரும்பும் போது உங்களுக்கு பின்னால், அதுவும் அருகிலேயே அந்தக் கரடி நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சென்ற வாரம் அப்படித்தான் இருந்திருக்கும் நம் விஞ்ஞானிகளுக்கு.

ஆம்.. இவ்வளவு நாள் எங்கோ பூமிக்கு வெகுதொலைவில் ஒரு ஓரமாக 'கருந்துளை' (Black Hole) இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். நம் பூமிக்கு மிக அருகிலேயே ஒரு ராட்சத பிளாக் ஹோல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எதேச்சையாக, ஜெர்மனியில் உள்ள 'மேக்ஸ் ப்ளான்க்' என்ற அறிவியல் ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் தொலைநோக்கியில் பூமிக்கு அருகே அமைந்திருந்த நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்த போது தான் இந்த பிளாக் ஹோலை கண்டுபிடித்துள்ளனர். மிகவும் அடர்த்தியாக இருந்ததால் இத்தனை ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கண்களில் படாமல் இருந்திருக்கிறது இந்த பிளாக் ஹோல். இந்த பிளாக் ஹோலால் பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம்.

 பிளாக் ஹோல் - ஒரு சிறு விளக்கம்

பிளாக் ஹோல் - ஒரு சிறு விளக்கம்

முதலில் பூமிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு முன்பு, பிளாக் ஹோல் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம். பிளாக் ஹோலை விளக்க வேண்டுமெனில், அதற்கு ஒரு நாள் போதாது. ஆனால் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நட்சத்திரங்கள் தங்கள் அந்திமக் காலத்தில் வெடித்து சிதறும் போது உருவாவதுதான் 'பிளாக் ஹோல்'. நட்சத்திரங்களின் அளவை பொறுத்து இவற்றின் அளவு மாறுபடும். சிறிதாக இருப்பது (சிறிது என்றால் நமது நாட்டின் அளவு) 'ஸ்டெல்லார் பிளாக்ஹோல்' என்றும், பெரிய கருந்துளை 'சூப்பர் மேசிவ் பிளாக்ஹோல்' (சூரியனை விட ஆயிரம் மடங்கு பெரியது) என்றும் அழைக்கப்படும். நமது கேலக்ஸியில் மட்டும் 100 மில்லியன் பிளாக் ஹோல்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 ஆபத்து நிறைந்த பிளாக் ஹோல்..

ஆபத்து நிறைந்த பிளாக் ஹோல்..

சரி.. இந்த பிளாக் ஹோல் அது பாட்டுக்கு இருந்துவிட்டு போகிறது. அதை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும் என சிலர் நினைக்கலாம். பிளாக் ஹோல் என்பது ஒரு மிகப்பெரிய வெற்றிடம். அதன் ஈர்ப்பு விசை கணக்கிட முடியாத அளவு இருக்கும். எனவே, ஒரு பிளாக் ஹோலுக்கு குறிப்பிட்ட தொலைவில் செல்லும் எந்தப் பொருளாக இருந்தாலும், அது பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் சரி. நக அளவு ஒளியாக இருந்தாலும் சரி. அப்படியே விழுங்கிவிடும். பூமியை விட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரத்தை கூட இந்த பிளாக் ஹோல் கபளீகரம் செய்யும் போது, நம் பூமி எல்லாம் எம்மாத்திரம். யோசனை செய்து பாருங்கள். பிளாக் ஹோலுக்கு உள்ளே சென்றால் முடிந்தது. சர்வநாசம்தான்.

 பூமிக்கு அருகே..

பூமிக்கு அருகே..

இந்நிலையில், தற்போது பூமிக்கு அருகே கண்டறியப்பட்டுள்ள பிளாக் ஹோலுக்கு விஞ்ஞானிகள் Gaiha BH 1 என பெயரிட்டுள்ளனர். இது சூரியனை விட 10 மடங்கு பெரிதாக உள்ளது. அது மட்டுமல்லாமல், பூமியில் இருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த பிளாக் ஹோல் அமைந்துள்ளது. இதற்கு முன்பு வரை, பூமிக்கு அருகே இருப்பதாக மோனோசெரோஸ் விண்மீன் கூட்டத்தில் (Constellantion of Monoceros) உள்ள ஒரு பிளாக் ஹோல் தான் அறியப்பட்டது. இது, பூமியில் இருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. ஆனால், இப்போது கண்டறியப்பட்டுள்ள பிளாக் ஹோல் அதை விட குறைந்த தொலைவில் உள்ளது. மேலும், இதற்கு அருகே நமது சூரியன் அளவு கொண்ட ஒரு நட்சத்திரம் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. பிளாக் ஹோலின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, மெல்ல மெல்ல அதனால் விழுங்கப்பட அந்த நட்சத்திரம் தயாராகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 பூமிக்கு ஆபத்தா?

பூமிக்கு ஆபத்தா?

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பிளாக் ஹோலால் பூமிக்கு ஆபத்தா என்று கேட்டால், 'இப்போதைக்கு நிச்சயமாக இல்லை' என்பதே விஞ்ஞானிகளின் பதிலாக இருக்கிறது. பிளாக் ஹோல்கள் மிகவும் ஆபத்தானவை தான் என்ற போதிலும், பூமிக்கும், நம் சூரியக் குடும்பத்துக்கும் எந்த பிளாக் ஹோல்களாலும் பாதிப்பு இல்லை. ஏனெனில், அந்த அளவுக்கு அருகில் எந்த பிளாக் ஹோலும் இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பிளாக் ஹோலும் 1,600 ஒளியாண்டுகள் தொலைவில் தான் இருக்கிறது. பூமியையோ, நமது சூரிய குடும்பத்தையோ விழுங்குவதற்கு இந்த தொலைவு மிக அதிகம்.

 சூரியனே பிளாக் ஹோலாக மாறுமா?

சூரியனே பிளாக் ஹோலாக மாறுமா?

நட்சத்திரம் வெடித்து தான் 'பிளாக் ஹோல்' உருவாகிறது என வைத்துக் கொண்டால், சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே.. அது வெடிக்கும் போது பிளாக் ஹோலாக மாறினால் என்ன செய்வது என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்புவதை பார்க்க முடிகிறது. முதலில், ஒரு விஷயத்தை நாம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். சூரியன் தான் நமது கேலக்ஸிக்கு உயிர் ஆதாரம். அது வெடித்து சிதறினாலே எல்லாம் முடிந்துவிடுமே. சரி.. ரொம்ப லாஜிக்லாம் வேண்டாம். சூரியன் வெடித்து சிதறி பிளாக் ஹோலாக மாறினால் என்னவாகும் என கேட்கிறீர்களா. அப்போதும் ஒன்றுமே ஆகாது. ஏனெனில் சூரியன் வெடித்து சிதறும்போது உருவாகும் பிளாக் ஹோல், சூரியன் அளவுக்கு அல்லது அதை விட சிறியதாகவே இருக்கும். எனவே, அத்தகைய அளவில் இருக்கும் ஒரு பிளாக் ஹோலால் பூமியை கிரகிக்க முடியாது என்பதே விஞ்ஞானிகளின் விளக்கம்.

English summary
Scientists discovered a Black Hole nearby our earth Scientists have discovered a supermassive black hole very close to our Earth. That is 1,600 light years away from earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X