திடீர் விபத்து.. 540 டிகிரி கோணத்தில் நகர்ந்த சர்வதேச விண்வெளி நிலையம்.. பரபரப்பு தகவல்கள்!
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 250 மைல் தொலைவில் அமைந்துள்ளது . பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இங்கு கூட்டாக பணி செய்து வருகின்றனர்.
கடந்த 1998 முதல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல்வேறு நாடுகள் இங்கு விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மிதக்கும் விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின் நௌகா' (Nauka) கலன் ஓன்று புதியதாக அனுப்பப்பட்டது. ரஷ்யாவின் நௌகா' (Nauka) கலன் ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட சில மணி நேரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது. 'நௌகா கலனின் உந்துவிசை உண்டாகும் கருவிகள் இயக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து எற்பட்டது.

திடீர் விபத்து
இந்த திடீர் விபத்து நடந்தபோது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களுக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் சர்வதேச விண்வெளி நிலையம் நிலைநிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 45 டிகிரி கோணத்தில் நகர்ந்தது என்று நாசா முதற்கட்டமாக தெரிவித்தது.

தொடர்பு துண்டிப்பு
இந்த விபத்து ஏற்பட்டவுடன் விண்வெளி நிலைய வீரர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையம் நன்றாக இயங்குவதாகவும் நாசா கூறியுள்ளது. ஆனாலும் முன்பு அறிவித்ததை விட சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

540 டிகிரி கோணத்தில் நகர்ந்தது
சர்வதேச விண்வெளி நிலையம் 45 டிகிரி கோணத்தில் நகர்ந்தது என்று நாசா கூறினாலும்,
சர்வதேச விண்வெளி நிலையம் அதன் அசல் நிலைக்கு ஒப்பிடும்போது.சுமார் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து தலைகீழாக மாறி விட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. ஹூஸ்டனில் உள்ள நாசாவின் மிஷன் கண்ட்ரோல் சென்டரில் பொறுப்பேற்றுள்ள விமான இயக்குனர் ஜெபுலன் ஸ்கோவில், 'இந்த சம்பவம் சரியாக தெரிவிக்கப்படவில்லை. விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்த பிறகு பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.

நாசா தீவிரம்
சர்வதேச விண்வெளி நிலையம் அவசரநிலையை அறிவித்ததால், தலைகீழாக மாறிய பிறகு, நிலையத்துடன் தொடர்பு கொள்ள நாசா மற்ற கூடுதல் ஆண்டெனாக்களைச் செயல்படுத்த வேண்டியிருந்தது. இந்த விபத்து காரணமாக விண்வெளி நிலையம் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி விட்டதகவும், ரஷ்யாவின் நௌகா கலன் விண்வெளி நிலையத்தின் அடிப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications