வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 18 லட்சத்து 34 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,919,377 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

78,609 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The number of corona virus victims worldwide has increased to 24 crore

சீனாவின் வூகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு அது பிற நாடுகளுக்கு தெரியவந்தது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 18 லட்சத்து 34 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 91 லட்சத்து 2 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் 65வது வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டவர் கொலின் பவுல். கொலின் பவுல் அமெரிக்கா முப்படைகளின் தலைமை தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். 84 வயதான கொலின் பவுல் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவராகும்.

இதற்கிடையில், கொலின் பவுலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கொலின் பவுல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் உயிரிழந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், உத்தரகாண்ட் மாநிலத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ்.எஸ்.சந்து இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எந்த கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படவில்லை அதேபோல புதிய ஊரடங்கு விலக்கும் அளிக்கப்படவில்லை.

சூப்பர் நியூஸ்..தமிழகத்தில் 25ஆவது நாளாக குறைந்த கொரோனா.. தினசரி பாதிப்பும் 1200க்கும் கீழ் சரிந்ததுசூப்பர் நியூஸ்..தமிழகத்தில் 25ஆவது நாளாக குறைந்த கொரோனா.. தினசரி பாதிப்பும் 1200க்கும் கீழ் சரிந்தது

வரும் நவம்பர் 20ம் தேதி பத்ரிநாத் நுழைவாயில் மூடப்படும். இதற்குப் பிறகுதான், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமூக விலகல் மற்றும் தூய்மைப்படுத்தலுக்கு முன்பு போல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளிகள் இயக்கப்படும். சுற்றுலா இடங்களில் கூட்டத்தை தவிர்க்க, கொரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு, ஸ்மார்ட் சிட்டி செயலியில் கோவிட் பரிசோதனையின் பதிவு, தடுப்பூசி அறிக்கை அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவை சமர்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The number of corona virus victims worldwide has increased to 24 crore 18 lakh 34 thousand 242. 1 crore 78 lakh 12 thousand 855 people are receiving treatment for the virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X