சார் பேரு ஜொனாதன்.. மாவீரன் நெப்போலியன் ஜெயிலில் இறந்த தீவுதான் இவர் நேட்டிவ்.. வயசு ஜஸ்ட் 190!
ஜேம்ஸ்டவுன்: அட்லாண்டிக் தீவில் அமைந்திருக்கும் செயின்ட் ஹெலனா தீவில் உலகின் மிகவும் வயதான ஆமை தனது 190வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறது.
உலகில் அதிக நாட்கள் வாழும் உயிரினம் ஆமை மட்டும்தான். ஆனால் இந்த ஆமை வகைகளில் சில இனங்கள் தற்போது அழிந்து வருகிறது. இதற்கு உலகம் வெப்பமயமாதலும், பிலாஸ்டிக் பொருட்கள் பயன்பாடும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது உலகின் வயதான ஆமைக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுவது, இந்த உயிரினத்தை பற்றியும் இதனை அழிவிலிருந்து காப்பாற்றுவதன் அவசியத்தை பற்றியும் அறிந்துகொள்ள உதவும் என்று சொல்லப்படுகிறது.
பிறந்த நாளில் யாரும் யோசிக்காததை செய்த பாலாஜி முருகதாஸ்.. ரசிகர்களிடம் வைத்த வித்தியாசமான வேண்டுகோள்

190 ஆண்டுகள்
1832ம் ஆண்டு உலகில் பல மாற்றங்கள் நடைபெற்றன. மன்னராட்சிகளின் முடிவுகாலம் என்றும் இதனை சொல்லாம். அப்படி ஒரு காலத்தில் பிறந்ததுதான் இந்த 'ஜொனாதன்' ஆமை. இன்னும் சரியாக சொன்னால் நெப்போலியன் தனது கடைசி போரில் தோல்வியடைந்து பிரிட்டனிடம் கைதாகி அட்லாண்டிக் தீவில் அமைந்திருக்கும் செயின்ட் ஹெலனா தீவில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இறுதியில் இங்கே இறந்தும்விட்டார். அவர் இறந்த சில ஆண்டுகள் கழித்து அதே தீவில் பிறந்ததுதான் இந்த 'ஜொனாதன்' ஆமை. பின்னர் இது அங்கிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துவரப்பட்டது. அதற்குள் 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.

எல்லாத்தையும் பார்த்த ஆமை
தற்போது இந்த ஆமைக்கு 190 வயதாகிறது. இதற்கிடையில் இரண்டு உலக போர்கள், பிரிட்டிஷ் மன்னராட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி சம்பவங்கள் ஏராளமான சிற்றரசர்கள், பேரரசர்கள், மகாராணிகள், அரண்மனைகள் என பலரையும் இந்த ஆமை பார்த்திருக்கிறது. பல இவர்களில் பலரிடம் இந்த ஆமை சில நாட்கள் வளர்ந்தும் இருக்கிறது. இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆமைதான் இந்த உலகின் மிகவும் வயதான உயிரினமாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கான கின்னஸ் சாதனையை பட்டத்தையும் ஜொனாதன் ஆமை பெற்றிருக்கிறது. தற்போது இது எங்கிருந்து கிளம்பியதோ அங்கேயே வந்து செட்டில் ஆகி இருக்கிறது.

பிறந்த நாள்
அதாவது செயின்ட் ஹெலனா தீவில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த ஆமை தற்போது சொகுசாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது இது இந்த வயதிலும் மற்ற பெண் ஆமைகள் மீது ஒன் வைத்திருக்கிறது. அவ்வப்போது பெண் ஆமைகளுடன் உல்லாசமாக இருப்பதாக ஆமையை பராமரித்து வருபவர்கள் கூறியுள்ளனர். வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் மாறவேயில்லை என்பதை போன்று ஆமை உல்லாசமாக வாழ்ந்து வருகிறது. ஆமையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேரட் மற்றும் பழங்கள் நிரம்பிய அதிகம் கெமிக்கல் இல்லாத ஸ்பெஷல் கேக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது என இதனை வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.

அழிவு
ஆமைகளை பொறுத்த அளவில் மொத்தம் 356 வகை இனங்கள் இருக்கின்றன. இதில் சில வகை ஆமைகள் டைனோசர் காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றன. ஊர்வன உயிரினங்களில் பாம்பும், முதலையும்தான் பழமையானது என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், சில வகை ஆமைகள் அதைவிட பழமையானவையாகும். இவ்வளவு பழமையான ஆமைகளில் சில தற்போது அழியும் தருவாயில் இருக்கிறது. அதிக அளவு கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இந்த ஆமைகளுக்கு எமனாக மாறுகின்றன. அதேபோல மருந்துக்காகவும், உணவுக்காகவும் ஆமைகள் வேட்டையாடப்படுகின்றன.