Trump: உக்ரைன் நேட்டோவில் சேர முடியாது.. ஜெலன்ஸ்கியை விரட்டி விட்ட டிரம்ப்! போரை நிறுத்தவும் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனை நேட்டோவில் இணைக்க வேண்டும் என்பதுதான் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியின் விருப்பம். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை ராஜா என்று டிரம்ப் தற்போது கை விரித்திருக்கிறார். மட்டுமல்லாது சில விஷயங்களை காலத்திற்கும் மாற்ற முடியாது என்றும், ரஷ்யா உடனான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியிருக்கிறார்.

Trump Ukraine NATO

என்ன சொல்கிறார் டிரம்ப்?

தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் இது குறித்து டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினால், ரஷ்யாவுடனான போரை கிட்டத்தட்ட உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும், அல்லது அவர் தொடர்ந்து சண்டையிடலாம். இது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒபாமா இருக்கும் போது க்ரைமியா (12 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குண்டு கூட வெடிக்காமல்!) கைவிடப்பட்டது, மேலும் உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது" என்று கூறியிருக்கிறார்.

நேட்டோவும் பிரச்சனையும்

உக்ரைன் மீது கடந்த 3 ஆண்டுகளாக ரஷ்யா போரை நடத்தி வருகிறது. இந்த போருக்கான காரணமாக ரஷ்யா முன்வைப்பது நேட்டோதான். நேட்டோ என்பது அமெரிக்கா தலைமையிலான ஒரு கூட்டு ராணுவப்படை. இதில் பல நாடுகளின் ராணுவம் இருக்கும். ஆனால், அமெரிக்காதான் தலைவன். இந்த கூட்டு படையில் இணைய உக்ரைன் முயற்சிக்கிறது. அப்படி நடந்தால் உக்ரைன் எல்லையில் அமெரிக்க ராணுவம் வந்து நிற்கும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல்.

ஏனெனில் ரஷ்யா-உக்ரைன் பக்கத்து பக்கத்து நாடுகள். எனவே நேட்டோவில் இணைய வேண்டாம் என ரஷ்யா கேட்டுக்கொண்டது. உக்ரைன் மதிக்கவில்லை. ஆகவே போரை நடத்தி வருகிறது.

நோபல் பரிசும் அமைதியும்

மறுபுறம் அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டும் என டிரம்ப் துடித்துக்கொண்டிருக்கிறார். இது சும்மா கிடைத்துவிடாது. போரை நிறுத்தினால் அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிவிடலாம் என யாரோ டிரம்பிடம் சொல்ல.. உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தி பெயர் வாங்கிவிட டிரம்ப் கிளம்பிவிட்டார்.

நேற்று முன்தினம் அலாஸ்காவில் வைத்து ரஷ்ய அதிபர் புதினை, டிரம்ப் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் பெரியதாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தையில் கருத்து ஒற்றுமை உருவாகியிருக்கிறது. அதாவது, உக்ரைன் மீதான போர் நிறுத்தம் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதை எப்படி செய்வது என்பதில்தான் இரு தரப்பினருக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே ஜெலன்ஸ்கியை மிரட்டி போர் நிறுத்தத்தை சாத்தியமாக டிரம்ப் முயன்றுள்ளார்.

போர் நிறுத்தம் சாத்தியமா?

இதை ஏற்கெனவே அவர் செய்து பார்த்திருக்கிறார். வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அனைவர் முன்னிலையிலும் வைத்து ஜெலன்ஸ்கியை டிரம்ப் அசிங்கப்படுத்தி இருந்தார். உலகமே இந்த விஷயத்தை லைவில் பார்த்து பதற்றமடைந்தது.

இன்றும் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் டிரம்ப் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் மேற்குறிப்பிட்ட விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். இதை ஜெலன்ஸ்கி நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே போர் தொடரும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+