ரஷ்யாவும் ஐஎஸ்ஐஎஸ்ம் ஒன்னுதான்! நடவடிக்கை எடுங்க இல்லைனா கலைச்சுடுங்க! ஐநாவில் கொந்தளித்த ஜெலன்ஸ்கி
வாஷிங்டன் : ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ஐநா சபையில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அட்டூழியங்களால் பலியானவர்களின் உடல்கள் இருக்கும் வீடியோவைக் காட்டி, உடனடியாகச் செயல்படுங்கள் இல்லையென்றால் ஐநாவை முழுவதுமாக கலைத்துவிடுங்கள் என ஆவேசமாக பேசினார்.
Recommended Video

உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர்தொடுத்து 40 நாட்களுக்கு மேலாக ஆகியிருக்கும் நிலையில், போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஐநா சபையில் உரையாற்றினார்.
ரஷ்யாவின் போர் விதிகளை மீறிய செயலால் எனது நாடு அமைதியை இழந்திருப்பதாகவும், மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில் ,குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டினார்.

ஐநாவில் ஜெலன்ஸ்கி உரை
மேலும் , ரஷ்ய அட்டூழியங்களால் பலியானவர்களின் உடல்கள் இருக்கும் வீடியோவைக் காட்டி, உடனடியாகச் செயல்படுங்கள் இல்லையென்றால் ஐநாவை முழுவதுமாக கலைத்துவிடுங்கள் என ஆவேசமாக பேசினார். மேலும் உக்ரைனின் புச்ச போன்ற நகரங்களில் ரஷ்ய துருப்புக்கள் செய்த அட்டூழியங்கள் ஐஎஸ்ஐஎஸ். பயங்கரவாதிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல. ரஷ்ய படைகளை போர் குற்றங்களுக்காக நீதியின் முன் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துமீறிய ரஷ்ய ராணுவம்
ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டிற்கு சேவை செய்யும் யாவரையும் தேடி வேண்டுமென்றே கொன்றது. "பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களிடம் கேட்க விரும்புவதைக் கேட்காததால் அவர்களின் நாக்குகள் பிடுங்கப்பட்டன. எனவே இது சில பிரதேசங்களை ஆக்கிரமித்த "டேஷ்" போன்ற பிற பயங்கரவாதிகளிடமிருந்து வேறுபட்டதல்ல.

வீட்டோ அதிகாரம்
இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரால் செய்யப்படுகிறது என்றார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒரு நாடான ரஷ்யா. உலக அரங்கில் பல தீர்மானங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தடுக்க பலமுறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதை தான் வோலோமிர் ஜெலன்ஸ்கி அப்படி குறிப்பிட்டார்.

ஐநாவை மூடுங்கள்
"ஐக்கிய நாடுகள் சபை "வெறுமனே மூடப்படலாம் பெண்களே, ஐ.நா.வை மூட நீங்கள் தயாரா? சர்வதேச சட்டத்தின் காலம் போய்விட்டதா? உங்கள் பதில் இல்லை என்றால், நீங்கள் உடனடியாக செயல்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால், உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு எங்கே போனது? அது இங்கே இல்லை என்றார். ஐநாவில் பேசும் போது ராணுவ பச்சை நிற டி-ஷர்ட்டை அணிந்திருந்த ஜெலென்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வெளியே உள்ள புச்சா நகரில் பொதுமக்களுக்கு எதிராக ரஷ்ய துருப்புக்கள் நடத்திய அட்டூழியங்கள் குறித்த சிலிர்க்க வைக்கும் வீடியோக்களையும் பேச்சின் போது காட்டினார்.












Click it and Unblock the Notifications