அமெரிக்காவில் மீண்டும் கொரோனா வேகம்.. தடுப்பூசி போட்டவர்களும் மாஸ்க் அணியனும் .. அதிரடி அறிவிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா வைரஸால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக உள்ளது
அமெரிக்கா. வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா முதல் அலை போட்டி புரட்டி எடுத்தது. அதில் இருந்து சிறப்பாக மீண்டது அமெரிக்கா. ஆனால் கொரோனா இரண்டாவது அலை அந்தளவுக்கு அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
இந்த நிலையில் சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலை தூக்கியுள்ளது. டெல்டா வைரஸ் மாறுபாடு பல இடங்களில் வேகமாக பரவி வருவதால் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா பின்வாங்குகிறது என்று பல பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

அரசுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் வாரங்களில் 2,00,000 தினசரி கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ளும் பாதையில் உள்ளது என்று அமெரிக்க முன்னாள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அதிகாரி அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொற்று குறைந்திருந்ததால் 2 மாதங்களுக்கு முன்பு முழுமையாக 2 டோஸ் போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என்று ஜோ பைடன் அரசு அறிவித்து இருந்தது.

மாஸ்க் அணியனும்
இந்த நிலையில் தற்போது கொரோனா வேகம் எடுத்துள்ளதால் தொற்று கணிசமாக பரவும் மற்றும் வேகமாக பரவுதல் உள்ள பகுதிகளில், அமெரிக்க மாவட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு அடங்கிய பகுதிகளில் இருக்கும்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களும் வீட்டுக்குள் மாஸ்க் அணியுமாறு நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பு மையங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Recommended Video

வெள்ளை மாளிகை
சமீபத்திய நாட்களில் டெல்டா வைரஸ் மாறுபாடு தனித்துவமாக வித்தியாசமாக செயல்படுகிறது என்பதைக் காட்டும் சமீபத்திய பாதிப்பு ஏற்படுத்தும் தரவுகள் அதிர்ச்சியை கொடுக்கின்றன என்று சி.டி.சி இயக்குனர் டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி கூறியுள்ளார். சி.டி.சி அறிவித்த உடனேயே வெள்ளை மாளிகை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஜோ பைடன் நம்புகிறார்
அதில், 'அதிபர் ஜோ பைடன் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யும் போது மாஸ்க் அணிந்துகொள்வார்கள். "சி.டி.சி வழிகாட்டுதல்களால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து அமெரிக்கர்களும் மாஸ்க் அணிவதை பின்பற்றுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன் நம்புவதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications