பயணம்.. இதுதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான வித்தியாசம்.. அமெரிக்கா சொன்ன காரணத்தை பாருங்க
வாஷிங்டன் : அமெரிக்கா தனது குடிமக்கள் இந்தியாவுக்கு போவதற்கு விதித்த கட்டுப்பாடுகளை சற்று எளிதாக்கி உள்ளது. அதாவது போகவே கூடாது என்ற 4வது நிலையில் இருந்து மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற 3வது நிலைக்கு மேம்படுத்தியுள்ளது. இதேபோல் 4 வது நிலையில் இருந்து 3வது நிலைக்கு குறைந்து பாகிஸ்தானுக்கான பயண பரிந்துரைகளையும் தளர்த்தி உள்ளது. ஆனால் காரணங்கள் வேறுவேறு.
அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான பயண ஆலோசனைகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது.
கொரோனா காரணமாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) இந்தியாவிற்கான செல்வதற்கான எச்சரிக்கையை சற்று குறைத்துள்ளது.

பயண தளர்வு
இது தொடர்பாக அமெரிக்கர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில்,. "நீங்கள் எஃப்.டி.ஏ அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக இரண்ட டோஸ் போட்டிருந்தால், கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கும் கடுமையான அறிகுறிகளை உருவாக்குவதற்குமான ஆபத்து குறைவாக இருக்கும். . எந்தவொரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடுவதற்கு முன்பு, தடுப்பூசி போடப்படாத மற்றும் போட்ட பயணிகள் எந்த நாடுகளுக்கு செல்லலாம் என்ற சி.டி.சி யின் குறிப்பிட்ட பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யுங்கள்" எனறு கூறியுள்ளது.

மறுபரிசீலனை
முன்னதாக பயண ஆலோசனையை மே 5 அன்று வெளியிடப்பட்ட போது, பயணிக்கவே வேண்டாம் என்கிற அளவை குறிக்கும் பயணநிலை 4 பிரிவில் இந்தியா இடம்பிடித்தது. இப்ப பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதை குறிக்கும் பயணநிலை 3வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

3வது நிலை
கடந்த மாத அமெரிக்கா பயண நிலை 4வது இடத்தில் இந்தியாவை வைக்கும் போது, இந்தியா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளுடன் கடுமையாக போராடி வந்தது, தினசரி 3,00,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகி வந்தன. மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையின் கீழ் மருத்துவமனைகள் திணறிக்கொண்டிருந்தன. இப்போது நிலைமை மாறி உள்ளதால் 3வது பயணநிலைக்கு இந்தியா மாறி உள்ளது.

3வது நிலை
பாகிஸ்தானுக்கான பயண நிலையையும் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு மேம்படுத்தி உள்ளது அமெரிக்கா. மிதமான அளவில் உள்ள தொற்று நோய் மற்றும் பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்களுக்கு வெளியுறவுத்துறை நிலை 3 வது நிலை ஆபத்து என்று பட்டியலிட்டுள்ளது.
Recommended Video

அமெரிக்கா
"பயங்கரவாதம் மற்றும் குறுங்குழுவாத வன்முறை காரணமாக பாகிஸ்தானுக்கு பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். COVID-19 காரணமாக பாகிஸ்தானில் நிலைமை சரியில்லை . சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளது. முழு பயண ஆலோசனையையும் படியுங்கள்" என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications