ரூ.5 கோடியாமே.. திருமணநாள் பரிசாக மனைவிக்கு லாட்டரி வாங்கி கொடுத்த கணவர்.. அடித்த ஜாக்பாட்
வாஷிங்டன்: அமெரிக்காவின் திருமணநாளில் கணவர் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கி தனது மனைவிக்கு பரிசாக வழங்கினார். அந்த லாட்டரியில் அவருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை விழுந்ததால் அந்த ஜோடி மகிழ்ச்சியில் திளைத்த வருகின்றனர். எதிர்பாராமல் கிடைத்த இந்த பரிசுத்தொகையை வைத்து வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தயாரித்து வருகிறது அந்த ஜோடி.

திருமண நாளில் கணவன்கள் மனைவிக்கும், மனைவிகள், கணவனுக்கும் தங்களின் பொருளாதார சூழலை பொறுத்து பரிசுகள் வழங்குவது வழக்கம். யாராவது மனைவிக்கு லாட்டரி சீட்டை பரிசாக வழங்குவார்களா?
ஆம், வழங்குவார்கள்.. அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது திருமணநாளையொட்டி விளையாட்டாக லாட்டரி சீட்டு வாங்கி தனது மனைவிக்கு வழங்கிய நிலையில் அதற்கு ரூ.5 கோடி பரிசு விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்துள்ளது. அங்குள்ள பெட்ஃபோர்ட் கவுண்ட்டி பகுதியில் பெண்ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவர் இருக்கிறார். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை திருமண நாளையொட்டி அந்த நபர் தனது மனைவிக்கு 2 லாட்டரி சீட்டுகளை வாங்கி கொடுத்தார்.
விர்ஜியானில் உள்ள வாட்டலிக் ரோட்டில் அமைந்து இருக்கும் 'குயிக் இ ஃபுட்ஸ்' ஸ்டோரில் இருந்து Gold 7s என்ற லாட்டரிகளை அவர் வாங்கி கொடத்தார். இது 'ஸ்கிராட்ச்' வகை லாட்டரியாகும். இதனால் அந்தபெண் தனது கணவர் தனக்கு வழங்கிய 2 லாட்டரிகளையும் சுரண்டிப்பார்த்தார். அப்போது தான் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு லாட்டரிக்கு பரிசு கிடைக்காத நிலையில் இன்னொரு லாட்டரிக்கு'ஜாக்பாட்' அடித்தது.
அந்த லாட்டரிக்கு 5 லட்சத்து 77 ஆயிரத்து 777 அமெரிக்கா டாலர் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.5 கோடியாகும். இதுபற்றி அந்த பெண் கூறுகையில், ''நாங்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறோம். விளையாட்டாக என் கணவர் வாங்கி கொடுத்த லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு விழுந்துள்ளது.
இந்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை நாங்கள் வெளிநாடுகளுக்கு சுற்றிப்பார்க்க செலவிட போகிறோம். இந்த திருமண நாளை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த திருமணநாள் எங்களின் வாழ்க்கையில் நல்ல மெமரியாக எப்போதும் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
