வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிரடியை ஆரம்பித்தார் டிரம்ப்.. பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் டிஸ்மிஸ்.. இனிதான் ஆட்டம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

Recommended Video

    இந்தியா வந்துவிட்டுப் போன Mark Esper-க்கு இந்த கதியா? | Oneindia Tamil

    மார்க் எஸ்பருக்கு பதிலாக தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், கூறுகையில் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் உயர் மதிப்பு மிக்க இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிரடிகள்

    அதிரடிகள்

    அதிபர் பதவியை துறக்கும் முன்பாக, பல அதிரடிகளை டிரம்ப் அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் பல முக்கிய முடிவுகளில் அவர் கையெழுத்திடவும் வாய்ப்பு உள்ளது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா வந்தார்

    இந்தியா வந்தார்

    அக்டோபர் மாதம் கடைசி வாரம் 2 பிளஸ் 2 ஆலோசனைக்காக எஸ்பர் இந்தியா வந்திருந்தார். அவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வருகைதந்து இங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ரவிசங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    தேர்தல் நேரம்

    தேர்தல் நேரம்

    வருடாவருடம் இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு நிகழ்ந்து வருவது வாடிக்கை. இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நேரத்தில் அவர்கள் டெல்லி வந்தது முக்கியத்துவமாக பார்க்கப்பட்டது.

    மோடியுடன் சந்திப்பு

    மோடியுடன் சந்திப்பு

    இதை வருகையின்போது மார்க் எஸ்பர் மற்றும் மைக் பாம்பியோ ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு பற்றி ஆலோசனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    I am pleased to announce that Christopher C. Miller, the highly respected Director of the National Counter terrorism Center (unanimously confirmed by the Senate), will be Acting Secretary of Defense, effective immediately.., says Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X