வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புளோரிடாவில் டிரம்ப் வெற்றி.. சொந்த மாகாணத்தில் கெத்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ளோரிடா மாகாணத்தில் ஜோ பிடனை வீழ்த்தி, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் மொத்தம் 29 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி, டொனால்டு டிரம்ப் 51 சதவீதம் வாக்குகள் பெற்றார். ஆனால் காலை 11.30 மணி நிலவரப்படி, புளோரிடாவை டிரம்ப் கைப்பற்றினார்.

ப்ளோரிடாவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. கடந்த பல தேர்தல்களில் புளோரிடா மாகாணத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அதிபராக உள்ளனர். இது ஒரு டிரெண்ட் செட்டர் மாகாணம்.

அமெரிக்க அதிபர் தேர்தல்.. 131 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை.. டிரம்ப் 92 வாக்குகளுடன் பின்னடைவு அமெரிக்க அதிபர் தேர்தல்.. 131 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை.. டிரம்ப் 92 வாக்குகளுடன் பின்னடைவு

டிரம்ப் சொந்த ஊர்

டிரம்ப் சொந்த ஊர்

இன்னொரு காரணம் என்னவென்றால், டொனால்ட் ட்ரம்ப்பின் சொந்த மாகாணம் புளோரிடா தான். டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது சொந்த மாகாணத்தை இழப்பது அவருக்கு பின்னடைவாகும். காலையில் உள்ள சூழ்நிலையில் அவர் முன்னிலையில் இருந்ததால் குடியரசுக் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புளோரிடாவில் கடும் போட்டி

புளோரிடாவில் கடும் போட்டி

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்ப் புளோரிடா மாகாணத்தில் ஒரு சதவீதம் வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். இந்த முறை ஜோ பிடன் மற்றும் டிரம்பு இடையே இந்த மாகாணத்தில் கடும் போட்டி இருக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. காலை முதல் அப்படித்தான் இருந்தது. ஆனால், புளோரிடாவை கைப்பற்றி, 29 ஓட்டுக்களை பெற்றுள்ளார் டிரம்ப். இந்த ஓட்டுக்களை அவர் இழந்திருந்தால், அதிபர் கனவை மறந்திருக்க வேண்டியதுதான். இப்போது போட்டி இன்னும் வலுவாகியுள்ளது.

ஜோ பிடன் வாதம்

ஜோ பிடன் வாதம்

அதே நேரத்தில் ஜார்ஜியா மற்றும் வட கரோலினா போன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க உதவும் பிற 'ஊசலாட்ட மாநிலங்கள்' டிரம்ப்புக்கு ஆதரவாக உள்ளன. அதேநேரம், புளோரிடா பின்னடைவால் பாதிப்பு இல்லை என்கிறார் ஜோ பிடன். அந்த மாகாணம், தனித்துவமானது, எல்லா மாகாணங்களுக்குமான டிரெண்ட் செட்டர் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜார்ஜியா நிலவரம்

ஜார்ஜியா நிலவரம்

நீண்ட காலமாக குடியரசுக் கட்சியின் கோட்டையாக இருந்த ஜார்ஜியா, அதிபர் தேர்தலிலும், செனட்டை கட்டுப்படுத்துவதிலும் முக்கியமான மாகாணம். அதிபர் டிரம்ப் 2016 ல் ஐந்து சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில், ஜார்ஜியா மாகாணத்தை வென்றார், 1992 முதல் ஜனநாயகக் கட்சி அங்கு வெற்றி பெற முடியவில்லை. இம்முறை இரு கட்சிக்கும் இடையே நெருக்கமான போட்டி உள்ளது. இருப்பினும் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

English summary
Us election 2020: Neck to neck race between Donald Trump and Joe Biden in Florida. This state is a must win for Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X