"போர் குற்றவாளி புதின்.." அமெரிக்க செனட் சபையில் நிறைவேறிய தீர்மானம்! விசாரணைக்கு வலியுறுத்தல்
வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினிடம் விசாரணை நடத்த கோரும் தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 3வது வாரமாக போர் புரிந்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிக்கும் குண்டுகள், வானில் இருந்து பாயும் ஏவுகணைகளால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து ரஷ்யா மீது குற்றம்சாட்டி வருகிறார். ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசுகின்றன. அப்பாவி மக்களை கொன்று குவிகக்கிறது. ரஷ்யா போர் நடவடிக்கையில் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி போர் குற்றங்கள் புரிந்து வருகிறது என கூறினார். உக்ரைனில் பிற அமைச்சர்களும் இதை முன்வைத்துள்ளனர்.

தனித்து விட முயற்சி
ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உலக அரங்கில் ரஷ்யாவை தனித்து விட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் ரஷ்யா எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா தரப்பில் உலக நாடுகளை ஓரணியில் திரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீர்மானம் நிறைவேற்றம்
இந்நிலையில் தான் உக்ரைனில், ரஷ்யா போர் குற்றம் புரிவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தார். குடியரசு கட்சி, ஜனநாயக கட்சிகளின் செனட்டர்களின் ஒருமித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதின் பொறுப்பேற்க...
இதுகுறித்து ஜனநாயக கட்சியின் செனட் சபையின் பெரும்பான்மை தலைவராக உள்ள சக் ஷூமர் கூறுகையில், ‛‛உக்ரைன் மக்களுக்கு இழைக்கும் அநீதி, அட்டூழியங்களுக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது. இதனால் குடியரசு, ஜனநாயக கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றுவது அவசியமாகி உள்ளது'' என்றார்.
Recommended Video

வெளிப்படையான ஆதரவு
இந்த தீர்மானம் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உள்பட உக்ரைன் மீதான போர் குற்றங்கள் தொடர்பான அனைத்து விசாரணைக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்க செனட் சபை அறிவித்துள்ளது. மேலும் உக்ரைன் போர் குற்றங்கள் தொடர்பாக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், அவரது பாதுகாப்பு கவுன்சில், ராணுவ படை தலைவர்களிடம் விசாரிக்க ஆதரவு அளிப்பதை அமெரிக்க செனட் சபை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications