ஈரானை மொத்தமாக அழிக்க நினைத்த டிரம்ப்.. ஒரே இரவில் நடந்த மாற்றம்! வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீது மிக பெரிய தாக்குதலை நடத்த போவதாக எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வெறும் 24 மணி நேரத்திலேயே தனது முடிவை மாற்றி தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தினார். டிரம்ப் ஏன் தனது முடிவை மொத்தமாக மாற்றினார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இடையில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக தாக்குதல்கள் சில காலம் ஓய்ந்திருந்தது. இருப்பினும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே தாக்குதல் ஆரம்பித்து.

US stops Iran attack

தொடர் தாக்குதல்

இந்த தாக்குதலில் அமெரிக்கா தொடர்ந்து 13 நாட்கள் ஈரான் மீது இரவு நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் தாக்குதல் நடத்தியது. அப்போது ஜூலை 23ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரான் இன்னும் போதுமான வலியை அனுபவிக்கவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறேன். அதற்கான முடிவை எடுக்க சீக்கிரம் இறுதி செய்வேன்.. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன" என்று கூறியிருந்தார்.

அன்றைய இரவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா தனது தாக்குதலை தீவிரப்படுத்தும் என பலரும் நினைத்த நிலையில், ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை. 14வது நாள் தாக்குதலுக்கான திட்டத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்து வைத்திருந்தபோதும், டிரம்ப் அதை நிறுத்த உத்தரவிட்டார். டிரம்பின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவின் ஆயுதங்கள் குறைந்து வருவதே இதற்கான காரணம் என சொல்லப்பட்டது.

முடிவை மாற்றிய டிரம்ப்

இதற்கிடையே இப்போது அமெரிக்க ஊடகம் இது குறித்து சில புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் தலைமை தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் அளித்த சில தகவல்களே டிரம்பின் மனதை மாற்றியதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தாக்குதல்கள் காரணமாக, கப்பல்களை தாக்கும் ஈரானின் திறன் பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் தாக்க வேண்டிய பெரும்பாலான இலக்குகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் டிரம்பிடம் எடுத்து கூறியிருக்கிறார்.

80% அழிப்பு

அதாவது ஈரானில் முக்கியமான இலக்குகளில் சுமார் 80 சதவீதத்தை அமெரிக்கா தாக்கி அழித்துவிட்டது. மீதமுள்ள 20 சதவீத இலக்குகளை தாக்க வேண்டுமெனில் மீண்டும் முழுமையான போர் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். எனவே, தாக்குதல்களை தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்று டிரம்பிடம் கூப்பர் எடுத்து சொன்னதாக கூறப்படுகிறது.

ஏவுகணை கையிருப்பு

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு குறைந்து வருவது தொடர்பாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரித்து இருக்கிறார். இந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தால்.. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும், நட்பு நாடுகளையும் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் நேரடியாகவே எச்சரித்துள்ளார். இந்த இரண்டையும் கேட்ட பிறகே டிரம்ப் தனது தாக்குதல் முடிவை தள்ளி வைத்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக அழைத்து செல்ல புதிய ஒப்பந்தம் போடுவது குறித்து ஈரானும் ஓமனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேநேரம் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+