வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்போ டெல்டா..இப்போ ஓமிக்ரான்.. புதுசா இது என்ன டெல்மிக்ரான்? என்ன செய்யும்? முழு விளக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என்று கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வரும் நிலையில், Delmicron என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    Corona Flashback 2021: கொத்து கொத்தாக மரணங்கள்.. அவலங்கள்! | OneIndia Tamil

    சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா கடந்த 2 ஆண்டுகளாகவே உலகை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது என்றே கூறலாம். உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க காரணம் என்ன?.. எப்படி பரவியது?.. வெளியான தகவல்! தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க காரணம் என்ன?.. எப்படி பரவியது?.. வெளியான தகவல்!

    அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்க நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மிக மோசமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளன. கொரோனா பாதிப்பைக் குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

    புதிய உருமாறிய கொரோனா

    புதிய உருமாறிய கொரோனா

    இருப்பினும், இதற்கெல்லாம் கொரோனா கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் இதன் பெரிய சிக்கலாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் அதன் பிறகு ஆல்பா, டெல்டா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின. இதனால் தான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட போது, அதைக் கண்டு உலக நாடுகள் அஞ்சின.

    ஓமிக்ரான் பாதிப்பு

    ஓமிக்ரான் பாதிப்பு

    2022இல் ஆவது கொரோனாவுக்கு குட்-பை சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம் என்று பார்த்தால் அது நடக்காது போல! டெல்டாவை காட்டிலும் ஓமிக்ரான் குறைந்தபட்சம் 3 மடங்கு வேகமாகப் பரவும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்படி மின்னல் வேகத்தில் பரவினால் அது மருத்துவ உட்கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேநேரம் ஒரே ஆறுதலாக இந்த ஓமிக்ரான் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் டெல்டா அளவு தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    இருப்பினும், உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 73% ஓமிக்ரான் கேஸ்களே! கடந்த நவம்பர் மாதம் அங்கு டெல்டா கொரோனா ஆதிக்கம் செலுத்தும் வகையாக இருந்த நிலையில், இப்போது ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பிரிட்டன் நாட்டிலும் ஓமிக்ரான் கொரோனாவால் தினசரி கொரோனா பாதிப்புகள் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    உருமாறிய டெல்மிக்ரான்

    உருமாறிய டெல்மிக்ரான்


    இப்படி ஓமிக்ரான் அச்சமே இன்னும் முடியாத நிலையில், டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக உருமாறிய கொரோனா ஒரு வகையான மாற்றத்தை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் இந்த டெல்மிக்ரான் இரண்டு வகையான மாற்றங்களைக் கொண்டிருக்கும். மிகவும் அரிதான நிகழ்வாக இப்படி இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா உருவாகலாம். இந்த டெல்மிக்ரான் வகை ஓமிக்ரானை காட்டிலும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக உலக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓமிக்ரான் vs டெல்மிக்ரான்

    ஓமிக்ரான் vs டெல்மிக்ரான்

    ஓமிக்ரான் என்பது கொரோனா வைரசின் B.1.1.529 பிறழ் வடிவமாகும். இது தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய மிக வேகமாகப் பரவுகிறது, ஆனால் அது டெல்டா கொரோனாவ விடக் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதேபோல இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைவு. அதேநேரம் மறுபுறம், டெல்மிக்ரான் என்பது டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகியவற்றின் கலவையாகும் - இது இரண்டு வகை உருமாறிய கொரோனாவின் கலவையாகும்.

    அறிகுறிகள் என்ன

    அறிகுறிகள் என்ன

    டெல்மிக்ரான் கொரோனாவின் அறிகுறிகள் பெரும்பாலும் ஓமிக்ரான் மற்றும் டெல்டா வகைகளைப் போலவே இருக்கும். உடலில் அதிக வெப்பம், தொடர்ந்து இருமல், சுவை அல்லது வாசனை இழப்பு, மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் தொண்டைப் புண் இருக்கும். டெல்டா மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடியது. இதன் கலவையாக டெல்மிக்ரான் தோன்றியுள்ளது ஆய்வாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சூப்பர் வேரியண்ட்

    சூப்பர் வேரியண்ட்

    இது தொடர்பாக மாடர்னா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பால் பர்டன் கூறுகையில், "ஓமிக்ரான் மற்றும் டெல்டா வகைகளால் ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் புதிய சூப்பர் வேரியண்ட் உருவாக்கும். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளிவந்துள்ள முதற்கட்ட தரவுகள் சிலர் இந்த இரண்டு வகையான கொரோனவால் ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடும் என்பதையே காட்டுகிறது. எனவே, இது ஆபத்தான சூப்பர் வேரியண்டை உருவாக்கக்கூடும்" என்றார்.

    உருமாறிய கொரோனா

    உருமாறிய கொரோனா

    அதேபோல மகாராஷ்டிராவின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறுகையில், "ஓமிக்ரான் இன்னும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. டெல்டா தான் நமது முக்கிய எதிராக உள்ளது. இப்போது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இரட்டை மாற்றமடைந்த டெல்மிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Delmicron a combination of the virus’ Delta and Omicron variants can transmit even faster. While Covid-19 infections only involve a single mutant strain, two can strike simultaneously in extremely rare cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X