பத்து ரூபாய்க்கு பத்தாயிரம் கொடுப்பாங்க.. இந்திய பண மதிப்பு உச்சத்தில் இருக்கும் நாடுகள்.. லிஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக அவ்வப்போது கேள்விபட்டு இருப்போம். பொருளாதார ரீதியாக பல்வேறு காரணிகளை கொண்டு ஒரு நாட்டின் பண மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் ரூபாயுடன் ஒப்பிடும் போது பண மதிப்பு அதலபாதாளத்தில் உள்ள பல்வேறு நாடுகள் உள்ளன. அவை குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்..
உலக அளவில் ஒவ்வொரு நாட்டின் பணத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா கரன்சிகளின் மதிப்பு உச்சத்தில் உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அன்னிய செலவானி, கையிருப்பு தங்கம் என பல்வேறு காரணிகளை வைத்து நாணய மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 85 ஆக உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு செல்வது என்றால் நம்மூர் பணத்தில் பெருமளவு தேவைப்படும். இந்தியாவின் பணமதிப்பும் அந்த நாட்டுடன் ஒப்பிடும் போது குறைவு என்பதால் பெரும் தொகை பிடிக்கும். அதேவேளையில், கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நாடுகள் பலவற்றிலும் பண மதிப்பு அதலபாதாளத்தில் இருக்கின்றன.
இந்திய பணத்துடன் ஒப்பிடும் போதே இவற்றின் மதிப்பு வியக்க வைக்கும் வகையில் குறைவாக இருக்கும். குறிப்பிட்டு சொல்வது என்றால் இந்தியாவின் 10 ரூபாய்க்கு 10 ஆயிரம் கொடுக்கும் அளவுக்கு பண மதிப்பு குறைவாக உள்ள நாடுகளும் உள்ளன. இப்படி சர்வதேச அளவில் பண மதிப்பு குறைவாக உள்ள சில நாடுகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
லெபனான்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் உள்நாட்டு போர் போன்றவற்றால் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதார தடை, இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஆகியவற்றால் லெபனான் கடும் சவால்களை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக லெபனான் பவுண்டை ஒப்பிட்டால் 0.000011 ஆக உள்ளது.
அதாவது அமெரிக்காவின் ஒரு டாலருக்கு ஈடான லெபானன் பவுண்டின் மதிப்பு 89497.25 ஆகும். இதே இந்திய பண மதிப்புடன் ஒப்பிட்டால் 0.00096 ஆக உள்ளது. இந்தியாவின் 10 ரூபாய்க்கு நிகரான லெபனான் பண மதிப்பு 10,442 ஆக உள்ளது.
ஈரான்
இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிப்பது ஈரான். மத்திய கிழக்கில் இருக்கும் ஈரான் அமெரிக்காவுடன் மோதல், பொருளாதார தடை ஆகியவற்றால் கடும் சவாலை சந்தித்துள்ளது. அதன் நாணய மதிப்பு மிகவும் பாதாளத்தில் உள்ளது. ஈரான் பணத்தை ரியால்-இ-ஈரான் என்று அழைக்கின்றனர். இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது ஈரானில் 503 ரியாலுக்கு ஈடானது. இந்தியாவின் 100 ரூபாயின் மதிப்பு ஈரானில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆகும்.
வியட்நாம்
தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் ஒரு குடியரசு நாடகும். வியட்நாம் பணம் டாங்க் (dong) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு சமமான வியட்நாம் பண மதிப்பு 297 ஆக உள்ளது.
இந்த பட்டியலில் அடுத்து இருப்பது சியேரா லியோனிக். இது ஒரு ஆப்பிரிக்க நாடாகும். குடியரசு நாடான ஆப்பிரிக்கா பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நாட்டின் பணம் சியோர லியோனே என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு ரூபாயின் மதிப்பு சியோரா லியோனே பணம் 263.22 ஆகும்.
இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான்
இந்த லிஸ்டில் 6-வது இடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்தியாவின் 1000 ரூபாயை கொடுத்தால் இந்தோனேசியா பண மதிப்புக்கு ரூ.1.89 லட்சம் கிடைக்கும். 7- வது இடத்தில் உஸ்பெஸ்கிஸ்தான் உள்ளது. இந்தியவின் ஒரு ரூபாய்க்கு ஈடான உஸ்பெஸ்கிதானின் சோம் பண மதிப்பு 150 ஆகும்.
பண மதிப்பு குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் 8-வது இடத்தில் கியானா உள்ளது. 9-வது இடத்தில் பராகுவேவும் 10 வது இடத்தில் மடகாஸ்கரும் உள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications