"ரூ 24,000 கோடி.." சீனாவுக்கு செக்! அதிநவீன கில்லர் டிரோன்களை வாங்கும் இந்தியா! இனி வாலாட்ட முடியாது
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன டிரோன்கலை இந்தியா வாங்க உள்ளது.
வாஷிங்டன்: இந்திய பாதுகாப்புத் துறைக்கு மிகப் பெரிய பூஸ்ட் கிடைக்கும் வகையில் அதிநவீன பிரிடேட்டர் டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஒப்பந்தம் மிக விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமுகமான உறவே கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா அதிகம் கொள்முதல் செய்து வருகிறது.
இதனிடையே இந்தியச் சீன எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க ஏதுவாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன டிரோன்களை வாங்கவுள்ளது. இது இந்திய பாதுகாப்புப் படைக்கு மிகப் பெரிய பூஸ்டாக இருக்கும்.

கில்லர் டிரோன்கள்
3 பில்லியன் டாலர் மதிப்பிலான 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன. இது இந்தியச் சீன எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதி தொடங்கிப் பல பகுதிகளில் இந்தியாவின் கண்காணிப்பை வலுப்படுத்த உதவும். கடந்த 5 ஆண்டுகளாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவே இதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாமதம்
இந்த MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய டிரோன்கள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிச்சயம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அதேநேரம் இது இத்தனை ஆண்டுகள் தாமதமாக என்ன காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. இந்த தொடர்பான அறிவிப்பு முதலில் கடந்த செப். மாதம் வெளியானது. அதன் பிறகு நீண்ட காலமாகவே இரு தரப்பும் இந்த விவகாரத்தில் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், இறுதி முடிவை எட்டுவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

இந்தியா ஆர்வம்
இவ்வளவு தூரம் தாமதமாக என்ன காரணம் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சமீபத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்கா சென்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் அமெரிக்காவின் டாப் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு தரப்புமே டிரோன் ஒப்பந்தத்தை விரைவாக முடிக்கவே ஆர்வம் காட்டியுள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரிய பூஸ்ட் என்பதால் இந்த டிரோன்களை முன்கூட்டியே பெறுவதில் இந்தியா ஆர்வமாகவே உள்ளது.

பைடன் ஆர்வம் ஏன்
பைடன் நிர்வாகமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஆர்வமாக உள்ளது.. இது அங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், அடுத்த ஆண்டு அங்கு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அரசியல் ரீதியாக இது தனக்கு பாசிட்டிவாக அமையும் என்று நம்புகிறார் பைடன். இதுவே அமெரிக்க நிர்வாகம் இதில் ஆர்வமாக இருக்கக் காரணமாகும். பல்வேறு காரணங்களால் உள்நாட்டில் பைடனுக்கு எதிர்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் இதுபோன்ற பெரிய ஒப்பந்தங்கள் அவரது இமேஜை பூஸ்ட் செய்துகொள்ள உதவும்.

டிரோன் சிறப்புகள்
இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய ராணுவத்தில் இப்போதும் டிரோன்கள் இருந்தாலும், இது டிரோன் பிரிவை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச் சென்றுவிடும். இந்த டிரோன்களால் அதிக நேரம் பார்க்க முடியும். மேலும், மற்ற டிரோன்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல செயல்களையும் இந்த டிரோன்கள் மூலம் செய்ய முடியும். மேலும், இரவு பகல் என்று எப்போது வேண்டுமானாலும் துல்லியமான வீடியோ பதிவையும் இந்த டிரோனால் தர முடியும். நிலத்தில் இதனால் எந்தளவுக்குப் பயணிக்க முடியுமோ.. அதேபோல பெருங்கடலிலும் இது கண்காணிக்கும் வகையில் எளிதில் மாற்றி அமைக்க முடியும்.

வளர்ந்த நாடுகள்
ஏஐ தொழில்நுட்பமும் இதில் இருப்பது கூடுதல் பலம். உளவு, கண்காணிப்பு, ராணுவ ரீதியாக என்று எப்படி வேண்டுமென்றாலும் இந்த டிரோன்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பல்வேறு வழிகளில் இந்த டிரோன்கள் இந்திய ராணுவத்திற்குப் பெரியளவில் உதவுவதாகவே இருக்கும். இப்போது உலகிலேயே நீண்ட தூரம் பறக்கக் கூடிய ஆளில்ல டிரோனாக இது உள்ளது. ஜப்பான், பெல்ஜியம், பிரிட்டன் தொடங்கிப் பல வளர்ந்த நாடுகளும் கூட இந்த டிரோன்களை பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டுகின்றன.

அமெரிக்கா
இரு நாடுகளும் இந்த டீலை விரைவில் இறுதி செய்யும் என்று அமெரிக்காவின் ராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெசிகா லூயிஸ் தெரிவித்தார். இந்திய அமெரிக்க அதிகாரிகளிடையே இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை குறித்த எந்தவொரு தகவலையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. இருந்த போதிலும், பேச்சுவார்த்தை பாசிட்டிவாக செல்வதாகவும் விரைவில் இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications