Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேட்டோவால் எங்களை எதிரியாக்காதீங்க! பின்லாந்து, ஸ்வீடனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை... என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்ற நிலையில் அதன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பின்லாந்து ஸ்வீடன் நாடுகள் நேட்டோ படையில் இணைய சில நாட்களில் விண்ணப்பம் செய்ய உள்ள நிலையில் ‛‛எங்களை எதிரியாக்காதீங்க'' என இருநாடுகளுக்கும் ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து வரும் உக்ரைன் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைய ஆர்வம் காட்டியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என ரஷ்யா நினைத்தது.

அதாவது உக்ரைன் எல்லையில் அமெரிக்க வீரர்கள் நின்று ரஷ்யாவை உளவு பார்க்க வாய்ப்பு ஏற்படும். இதனால் நேட்டோவில் இணையவே கூடாது என உக்ரைனிடம் ரஷ்யா வலியுறுத்தியது. இதற்கு செவிசாய்க்காத நிலையில் தான் ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போது 2 மாதங்களை தாண்டி போர் நடந்து வருகிறது.

நேட்டோ என்றால் என்ன

நேட்டோ என்றால் என்ன

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். 2ம் உலக போருக்கு பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்ப பெற மறுத்தது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் இந்த நேட்டோ படைகள். துவக்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், டென்மார்க் நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது நேட்டோ நாடுகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

உக்ரைன் போர் காரணம்

உக்ரைன் போர் காரணம்

ரஷ்யா-உக்ரைன் இடையே ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ளது. மேலும், ரஷ்யா மூலம் உக்ரைனுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதனால் ரஷ்யாவை சமாளிக்க நேட்டோவில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டியது. ரஷ்யாவை விட உக்ரைன் ராணுவம் சிறியது என்பதால் நேட்டோ படை உதவியுடன் ரஷ்யாவை சமாளிக்கலாம் என உக்ரைன் நினைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

பின்லாந்து, ஸ்வீடன் ஆர்வம்

பின்லாந்து, ஸ்வீடன் ஆர்வம்

இந்நிலையில்ல ரஷ்யாவின் அண்டை நாடுகளாக இருக்க கூடிய பின்லாந்து, சுவீடன் ஆகியவை நேட்டோ படையில் இணைய முடிவு செய்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கையை பார்த்த நிலையில் அந்நாடுகள் இதில் உறுதியாக உள்ளனர். ரஷ்யா தனது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனை உருவாக்க நினைக்கிறது. இதனால் உக்ரைனுக்கு பிறகு பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை ரஷ்யா குறிவைக்கலாம் என அந்நாடுகள் அஞ்சுகின்றன. இது நடந்தால் ரஷ்யாவை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். ஏனென்றால் இருநாடுகளின் ராணுவங்களும் ரஷ்யாவை ஒப்பிடும்போது சிறியதாகும். இதனால் நாடுகளை ரஷ்யாவிடம் இழக்கும் நிலை உருவாகும். இதை தடுக்க நேட்டோவில் இணையமுயன்று வருகின்றன.

 விரைவில் விண்ணப்பம்

விரைவில் விண்ணப்பம்

நேட்டோவில் இணைவதன் மூல நேட்டோ படையினரின் ஆதரவு கிடைக்கும். இதன்மூலம் ரஷ்யா தங்களை எதிர்க்க அஞ்சும் என பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நினைக்கின்றன. மேலும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவால் அமைதி சீர்குலைந்து உள்ள நிலையில் நேட்டோவில் இணைவது தான் பாதுகாப்பானது என அந்நாடுகள் கருதுகின்றன. இதனால் முறைப்படி நேட்டோ படையில் இணைய பின்லாந்து, ஸ்வீடன் ஆகியவை விண்ணப்பம் செய்ய உள்ளன.

பின்லாந்து தயார்

பின்லாந்து தயார்

இதுபற்றி பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ கூறுகையில், ‛‛நேட்டோ பாதுகாப்பு படையில் இணைய தயராக இருக்கிறோம். இன்னும் சில நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. இதனை முடித்துவிட்டு முறைப்படி இணைய விண்ணப்பம் செய்வோம். ரஷ்யா கொடூரமான முறையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தான் பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய உள்ளோம். எங்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக இருக்கின்றன. இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க உள்ளோம். அதற்குப் பிறகு நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பங்களை அனுப்புவோம்'' என்றார்.

 நேட்டோ வரவேற்பு

நேட்டோ வரவேற்பு

இதுபற்றி ஸ்வீடன் நாட்டு தரப்பில் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பம் செய்யும்போது ஸ்வீடனும் அதை மேற்கொள்ளும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைவதை அந்த படையில் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் வரவேற்றுள்ளார். இதுபற்றி ஏப்ரல் 28 ல் நடந்த நேட்டோ யூத் மாநாட்டில் அவர் பேசியபோது, ‛‛பின்லாந்து, ஸ்வீடன் ஆகியவை 30 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் இணைய விரும்புவதை வரவேற்கிறேன்'' என தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா கடும் எச்சரிக்கை

ரஷ்யா கடும் எச்சரிக்கை

இதையடுத்து பின்லாந்து, ஸ்வீடன் செயலை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபற்றி கனடாவுக்கான ரஷ்ய தூதர் ஒலேக் ஸ்டெப்னாவ் கூறுகையில், ‛‛இந்த நாடுகள் நேட்டோ படையில் இணைவதன் மூலம் ஐரோப்பி நாடுகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும். மேலும் இருநாடுகளுக்கும் ரஷ்யாவை எதிரியாக சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும் '' என்றார். இதனால் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் மீது ரஷ்யா தனது கோபத்தை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+