நினைத்தது ஒன்னு, நடந்தது ஒன்னு! அழுது புலம்பியவருக்கு லாட்டரியில் அடித்த யோகம்! 17 கோடின்னா சும்மாவா
வாஷிங்டன்: குறிப்பிட்ட ஒரு லாட்டரி தான் வாங்க வேண்டும் என்று நினைத்து கடைக்கு சென்ற பெண்ணுக்கு கடைக்காரர் தவறுதலாக வேறு ஒரு டிக்கெட்டை கொடுத்துள்ளார். இதனால் அழுது புலம்பி வேதனை அடைந்த பெண்ணுக்கு கடைசியில் கடைக்காரர் மாற்றிக் கொடுத்த டிக்கெட்டுக்கு ரூ.17 கோடி பரிசு அடித்ததால், இப்போது அந்த பெண் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.
லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் சிலர், இதுதான் நமக்கு அதிர்ஷ்ட எண், இந்த தேதியில்தான் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கூட வாங்குகிறார்கள். அப்போது கூட பலருக்கும் சல்லி பைசா கிடைக்காது என்பதெல்லாம் வேறு கதை.. ஆனாலும் பலருக்கும் குறிப்பிட்ட டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்ற விரும்புகிறார்கள்.

லாட்டரி பரிசு
ஆனால், அப்படி நடக்காமல் போனால் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஆனால், விருப்பத்திற்கு மாறாக நடந்த ஒரு விஷயத்தால், லாட்டரியில் பெண் ஒருவருக்கு ரூ.17 கோடி பரிசாக அடித்துள்ளது. நினைத்த டிக்கெட்டை வாங்க முடியவில்லையே என அழுது புலம்பியவருக்கு தவறான டிக்கெட்டே கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கரோல்டன் பகுதியை சேர்ந்தவர் கெல்லி லின்ட்ஸே. இவருக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. அவ்வப்போது லாட்டரி வாங்கும் இவர், நமக்கும் ஒரு நாள் அதிர்ஷடம் அடித்து கோடிகளை குவித்து விடமாட்டோமா? என கனவுடன் வாங்கி வந்து இருக்கிறார். ஆனால் இது நாள் வரையில் பெரிதாக பணம் அடிக்கவில்லை.
வேறொரு டிக்கெட்டை கொடுத்த கடைக்காரர்
இப்படியான சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அங்குள்ள ஒரு கடையில் சென்று குறிப்பிட்ட ஒரு லாட்டரியை கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரரோ தவறுதலாக மணி பிளிட்ஸ் ஸ்க்ராட்ச் லாட்டரி டிக்கெட்டை கொடுத்துவிட்டார். கெல்லி லிண்ட்ஸேவும் கவனிக்காமல் இந்த டிக்கெட்டை வாங்கி சென்றுவிட்டார். வீட்டில் சென்று பார்த்த பிறகு தான் விரும்பிய டிக்கெட் கிடைக்கவில்லை என்பதும், தவறுதலாக வேறு லாட்டரி டிக்கெட் கிடைத்து இருப்பதையும் உணர்ந்து இருக்கிறார்.
17 கோடி பரிசு
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த லிண்ட்சே, வேண்டா வெறுப்பாக டிக்கெட்டை சுரண்டி பார்த்து இருக்கிறார். அடுத்த நொடி நடந்ததை அவராலேயே நம்ப முடியவில்லையாம் . தவறாக வாங்கிய அந்த டிக்கெட்ட்டில் 2 மில்லியன் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,32,83100- கிடைத்து இருக்கிறது. வரிகள் எல்லாம் பிடித்தம் போக $1,250,000 கிடைக்க உள்ளது. இது குறித்து லிண்ட்சே கூறுகையில், "முதலில் தவறான டிக்கெட் கிடைத்ததும் எரிச்சல் அடைந்தேன். ஆனால், தற்போது இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications