ஐ லவ் யூ டாட்... நீங்கள் ஒரு வீரன்... கொரோனாவையும் வெல்வீர்கள் - இவாங்கா ட்ரம்ப் ட்வீட்
போர்வீரரை போன்றவர் எனது தந்தை, கொரோனாவை வென்று திரும்புவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : உலகம் முழுவதும் மூன்றரை கோடி மக்களை பற்றிய கொரோனா அமெரிக்க அதிபரையும் விடவில்லை. முக கவசம் போடாமல் வலம் வந்த ட்ரம்ப், அவரது மனைவி மெலனியாவை கொரோனா பற்றியுள்ளது. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தை கொரோனாவை வென்று வீடு திரும்புவார் என்று பதிவிட்டுள்ளார் அவரது மகள் இவாங்கா ட்ரம்ப்.
அமெரிக்காவில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு ட்ரம்ப் பிரச்சாரப் பணிகளில் பிசியாக இருந்தார்.
கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் முக கவசம் அணியாமல் தில் ஆக வலம் வந்தார் ட்ரம்ப். அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதம் கடந்த வாரம் மூன்று நாட்களாக நடைபெற்றது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்தனர். இதனிடையே உயிர்கொல்லி கொரோனா வெள்ளை மாளிகையை உரசிப்பார்த்துள்ளது.

கொரோனா பரவியது
ட்ரம்பிற்கு மிக நெருக்கமான உதவியாளரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவரும் ட்ரம்பும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று விமானத்தில் ஒன்றாக பயணித்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்பும், அவரது மனைவில் மெலனியாவும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

கொரோனா உறுதி
இதில் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பணிகளை உடனடியாக தொடங்க இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இதில் இருந்து மீளுவோம் என்று தெரிவித்தார்.

ராணுவ மருத்துவமனையில் அனுமதி
இதனிடையே ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு போகும் முன்பாக மாஸ்க் அணிந்து சைகையில் பேசியபடி சென்றார் ட்ரம்ப்.
You are a warrior and will beat this.
— Ivanka Trump (@IvankaTrump) October 2, 2020
I love you dad. ❤️ https://t.co/Y7feCvr2lW
ஐ லவ் யூ டாட்
ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது மகள் இவாங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தைக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
நீங்கள் வாரியர்... கொரோனாவை வெற்றி கொள்வீர்கள் ஐ லவ் யூ டாட் என்று பதிவிட்டுள்ளார்.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications