"100% பைத்தியம்.. விஷ எண்ணெய்!" இந்திய வம்சாவளி மம்தானிக்கு அமெரிக்காவில் சுனாமி அளவு எகிறிய எதிர்ப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ளார். ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி தேர்வான உடனேயே எல்லா பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சொந்த கட்சிக்குள்ளேயும் அவர் மீது காட்டமான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரின் மேயர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அமெரிக்காவில் பொதுவாக ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார். அதன்படி அங்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

சுனாமி அளவு எதிர்ப்பு
இதில் இந்திய-அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான மீரா நாயரின் மகன் சோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மம்தானி தேர்வாகியுள்ளார். இருப்பினும், அவர் தேர்வான உடனேயே அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சொந்த கட்சி, மாற்றுக் கட்சி.. அவ்வளவு ஏன் அமெரிக்க அதிபரே கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். "நச்சு எண்ணெய் விற்பனையாளர்" முதல் "100% கம்யூனிஸ்ட்" வரை பல விமர்சனங்களை மம்தானி எதிர்கொண்டு வருகிறார்.
சொந்த கட்சியிலும் எதிர்ப்பு
மம்தானியின் வாக்குறுதிகள், இஸ்ரேல் மீதான கடுமையான விமர்சனங்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவு ஆகியவையே இதற்குப் பிரதான காரணம். மம்தானியின் சொந்த கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மம்தானியை "நச்சு எண்ணெய்" விற்பனை செய்பவர் எனக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "வெற்றி பெறுவதற்காக மம்தானி எதை வேண்டுமானாலும் பேசலாம் எனப் பேசி வருகிறார். மம்தானி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்" என்றார்.
மம்தானி பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதாவது வாடகை கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளின் வாடகையை உயர்த்தாமல் அப்படியே நிறுத்துவேன் என மம்தானி வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், இலவச பேருந்து சேவை, குழந்தை பராமரிப்பு, அரசு நடத்தும் பலசரக்கு கடை எனப் பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் இதுபோன்ற வாக்குறுதிகள் இதுவரை அளிக்கப்பட்டதே இல்லை
வாக்குறுதிகள்
இந்த திட்டத்திற்கு 10 பில்லியன் வரை செலவாகும் எனச் சொல்லும் மம்தானி, இந்த செலவை நியூயார்க் நகரில் வசிக்கும் பணக்காரர்களிடம் இருந்து அதிக வரி வசூலிப்பதன் மூலம் ஈடுகட்ட முடியும் என்று கூறினார். ஆனால் இதுதான் சிக்கல். ஏனென்றால் அந்நாடு சட்டப்படி மேயர்களால் வருமான வரியை உயர்த்த முடியாதாம். இதைக் குறிப்பிட்டே மம்தானி தேர்தலில் வெல்லப் பொய்களைச் சொல்லி வருவதாக ஆடம்ஸ் விமர்சித்துள்ளார்.
டிரம்ப் விமர்சனம்
அதேபோல அமெரிக்க அதிபரான டிரம்பும் மமன்தானி சாடியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "இறுதியாக எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது, ஜனநாயக கட்சியினர் எல்லையை மீறிவிட்டார்கள். 100% கம்யூனிஸ்ட் பைத்தியக்காரரான சோஹ்ரான் மம்தானி ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்" என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குநர் மீரா நாயர் ஆகியோரின் மகன் சோஹ்ரான் மம்தானி. 33 வயதான மம்தானி தனது ஏழு வயதில் பெற்றோருடன் நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்தார். 2018ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அவர், தொடர்ந்து நியூயார்க் நகரச் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications